முகப்பு /செய்தி /சிவகங்கை / காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு... அருவி போல் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்!

காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு... அருவி போல் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்!

வீணான குடிநீர்

வீணான குடிநீர்

Karaikudi water waste | காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் முறையாக பராமரிப்பு இல்லாததால் இவ்வழித்தடத்தில் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு வருகிறது.

  • Last Updated :
  • Sivaganga, India

திருப்புத்தூர்- புதுக்கோட்டை சாலையில் காவிரி கூட்டு  குடிநீர் குழாய் உடைப்பால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானது. 

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் புதுக்கோட்டை சாலை புதுப்பட்டி பகுதியில் சங்கிலியான் கோவில் அருகே மாலையில் திடீரென  காவிரி கூட்டு குடிநீர் குழாய் வாழ்வு உடைப்பு ஏற்பட்டு 10 அடி உயரத்துக்கு தண்ணீர் பீச்சி அடித்தது.  இதனால் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு வெயிலுக்கு இதமாக தண்ணீர் நீர் வீழ்ச்சி போல் பீச்சி அடித்தது போன்று உணர்ந்ததால் சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு வேடிக்கை பார்க்க தொடங்கினார்.

தகவல் அறிந்த திருப்புத்தூர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர் இதில் ஒரு சில நபர்கள் குளிக்க முற்பட்டவர்களை போலீசார் கலைந்து செல்ல அறிவுறுத்தினார் பின்னர் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அனைவரும் தண்ணீர் பீச்சி  அடிப்பதை பார்த்து செல்போன்களில் வீடியோ எடுப்பதும் செல்ஃபி எடுப்பதுமாக இருந்தனர்.

4 மணி நேரம் கழித்து தொழிலாளர்கள் தண்ணீர் வெளியேறுவதை கட்டுப்படுத்தி உடைப்பை சரி செய்யும் பணி செய்து வருகின்றனர். மேலும்  காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் முறையாக பராமரிப்பு இல்லாததால் இவ்வழிதடத்தில் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து உடைப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்: முத்துராமலிங்கம், காரைக்குடி.

top videos
    First published:

    Tags: Karaikudi, Local News, Sivagangai