சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் மற்றும் சவுந்தர நாயகி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று சங்கொலி முழங்க கொடியேற்றம் நடந்தது. காசியை விட அதிகம் புண்ணியம் தரும் ஸ்தலம் திருப்புவனம், வைகை ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து புஷ்பவனேஷ்வரரை வழிபட ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு வருடந்தோறும் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இந்தாண்டு திருவிழாவை முன்னிட்டு சங்கொலி முழங்க நந்தி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு புஷ்பவனேஷ்வரர் மற்றும் சவுந்தரநாயகி அம்மன் மற்றும் பிரியாவிடை தாயாருடன் அலங்கார கோலத்தில் எழுந்தருளினார்.
கொடியேற்றத்தை முன்னிட்டு கொடி மரத்திற்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. காலை 11.20 மணிக்கு கொடியேற்றம் வைபவம் நடந்து முடிந்தது. வரும் ஞாயிறு அன்று திருக்கல்யாணமும், திங்கள் கிழமை தேரோட்டமும் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க : அடடா..! ஊட்டி கிளைமேட் இவ்வளவு இதமாக இருக்கா!
தினசரி புஷ்பவனேஷ்வரரும் அம்மனும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். கொடியேற்றத்திற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Sivagangai