முகப்பு /செய்தி /சிவகங்கை / தாயமங்கலம் முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் திருவிழா தொடக்கம்.. பக்தர்கள் பரவசம்!

தாயமங்கலம் முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் திருவிழா தொடக்கம்.. பக்தர்கள் பரவசம்!

தாயமங்கலம் முத்துமாரியம்மன்

தாயமங்கலம் முத்துமாரியம்மன்

Thayamangalam festival | தென் மாவட்ட மக்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் தாயமங்கலம் திருவிழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Sivaganga, India

தென் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியோற்றத்துடன் துவங்கியது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் தென் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில்  பங்குனி விழா கொடியேற்றம் நேற்று இரவு 10.50 மணிக்கு  கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பங்குனி திருவிழா, ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவையொட்டி தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் இங்கு வந்து இந்த விழாவில் கலந்துகொண்டு தரிசனம் செய்வார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் இந்தாண்டு பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதன் பின்னர் அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பொங்கல் விழாவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம் வருகிற ஏப்ரல் மாதம் 5-ந்தேதி நடக்கிறது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர்,மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகிறது.

ஏப்ரல் 6-ந்தேதி இரவு மின் விளக்கு அலங்காரத்தில் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. 7-ந்தேதி பால்குடம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், மறுநாள் ஊஞ்சல் உற்சவம் மற்றும் இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. 10-ம் நாள் விழா காலையில் தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் மு.வெங்கடேசன் செட்டியார் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

First published:

Tags: Festival, Sivagangai