சிவகங்கையில் நரிக்குறவர் குடியிருப்பில் முதன்முதலாக பிளஸ் 2 தேர்ச்சி அடைந்த மாணவர், சாதிச் சான்றிதழுக்காக அலைக்கழிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சிவகங்கை பழமலை நகரில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த 300 குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் முதன்முதலாக ஜெயபாண்டி மகன் தங்கப்பாண்டி பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்று 438 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். அவரை ஆட்சியர் உள்ளிட்டோர் பாராட்டினர்.
மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இருந்த நரிக்குறவர் சாதியை பழங்குடியினர் பிரிவுக்கு மாற்றி சமீபத்தில் மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. தங்கப்பாண்டி அரசுக் கலை கல்லூரியில் சேர்வதற்காக மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இருக்கும் தனது சாதி சான்றை, பழங்குடியினர் பிரிவுக்கு மாற்ற விண்ணப்பித்துள்ளார்.
ஆனால் ஒரு வாரமாகியும் வருவாய்த்துறை அதிகாரிகள் சான்று வழங்காமல் புகார் எழுந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி உடனடியாக தலையிட்டு மாணவனுக்கு ஜாதி சான்றிதழை வழங்கினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.