சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பாப்பா ஊரணி நாச்சுழியேந்தல் பகுதியில் வசித்து வருபவர் இந்திரா. இவரது மகன் அலெக்ஸ்பாண்டியன் 28 வயதான நிலையில் தனது தாயுடன் வசித்து வந்தார். கடந்த மாதம் 30-ம் தேதி இரவில் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த அலெக்ஸ்பாண்டியனை, ஒரு கும்பல் திடீரென வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக வெட்டி கொலை செய்தது.
அலெக்ஸ்பாண்டியன் கொலை சம்பவம் குறித்து காரைக்குடி தெற்கு போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. அலெக்ஸ்பாண்டியனை அவரது உடன் பிறந்த சகோதரிகளும், தாய் இந்திராவும் சேர்ந்தே கூலிப்படையை ஏவி கொலை செய்திருப்பது தெரியவந்தது. கோடி கணக்கில் உள்ள சொத்துகளை பெண் பிள்ளைகள் மட்டுமே அனுபவிக்க வேண்டும்.
இதையும் படிக்க : குடிபோதையில் தகராறு.. நண்பரின் ஆணுறுப்பை வெட்டி வீசிய நபர்..
ஆண் வாரிசு உயிருடன் இருந்தால் சொத்தை அனுபவிக்க முடியாது என்பதால் கூலிப்படையினரை வைத்து செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த காரணத்தை நம்புவதற்கு முதலில் தயக்கமாக இருந்தாலும் கூலிப்படையை கைது செய்து நடத்திய விசாரணையில் உண்மை வெளிவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அலெக்ஸ்பாண்டியனின் தாய் இந்திரா, மூத்த சகோதரி தமிழரசி, இளைய சகோதரி இந்திரா ஆகியோரை கைது செய்து நடத்திய விசாரணையில் சொத்திற்காக நடந்த கொலை என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
கொலை செய்த மதுரை திருமங்கலம் மையிட்டான்பட்டியை சேர்ந்த வினித், விருதுநகர் கருப்பசாமி நகர் விஜயகுமார், ஆத்திமேடு வெங்கடேஸ்வரன், ராஜபாளையம் கிறிஸ்துராஜபுரம் அந்தோணி மற்றும் 2 சிறுவர்கள் உட்பட மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
சொத்திற்காக இளைஞரை அவரது தாய் மற்றும் சகோதரிகளே சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் சிவகங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : முத்துராமலிங்கம் (காரைக்குடி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Sivagangai