சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நான்கு வழிச் சாலையில் ஸ்டியரிங் பழுதால் தடுமாறிய அரசு பேருந்து சென்டர் மீடியனில் ஏறி நின்றதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
மதுரை கோட்டத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ராமேஸ்வரத்தில் இருந்து 52 பயணிகளுடன் மதுரை நோக்கி புறப்பட்டது. பேருந்தில் ஓட்டுநராக சங்கிலிகுமார் என்பவரும், நடத்துநராக ஆனந்தகுமாரும் இருந்துள்ளனர். பரமக்குடி, மானாமதுரையில் பயணிகளை ஏற்றி இறக்கிய பின் திருப்புவனத்தை அடுத்த தட்டான்குளம் என்ற இடத்தில் செல்லும் போது திடீரென பேருந்தின் ஸ்டியரிங் வீல் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் ஏறியது. சென்டர் மீடியனில் இருந்த இரும்பு கம்பம், சிமெண்ட் தூண் உள்ளிட்டவற்றை தகர்த்து விட்டு நின்று விட்டது. பயணிகள் சிறு சிறு காயங்களுடன் மீட்கப்பட்டு அடுத்த பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் வாசிக்க: கபடி விளையாடியபோது தலையில் அடிபட்டு 16 சிறுவன் உயிரிழப்பு... காரைக்குடியில் அதிர்ச்சி...
விபத்து குறித்து திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். பயணிகள் கூறுகையில் பஸ் அளவான வேகத்துடன்தான் வந்தது. திருப்புவனம் பைபாஸ் ரோட்டை தாண்டி மெதுவாக வந்த பஸ் திடீரென அலைமோதி சென்டர் மீடியனில் ஏறி நின்றது. தடுமாறி குலுங்கியதால் பஸ் சீட்களுக்கு இடையே முட்டி மோதி காயமடைந்தோம் என்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bus accident