நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் தடா சந்திரசேகரனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தந்திருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தலைவர்களில் முதிர்ச்சியடைந்தவர், அடையாதவர் என்றெல்லாம் கிடையாது. ஒரு கட்சி அவரை மாநிலத் தலைவராக நியமித்துள்ளது. அதற்கு ஒரு மரியாதை கொடுக்கனும். வயதில் சிறியவர்கள், பெரியவர்கள் எல்லாம் அரசியலில் பார்க்க முடியாது. பாஜக எங்களோடு தான் கூட்டணியில் இருக்கிறது என்று இவர்களும் சொல்வார்கள். அண்ணாமலையும் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என்று சொல்வார்.
இதையும் படிங்க : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 514 பேருக்கு கொரோனா பாதிப்பு
அரசியல் விளையாட்டில் இதுவும் ஒரு விளையாட்டு அவ்வளவு தான். வருமானவரித்துறை, அமலாக்கத்துறை எல்லாம் மத்திய அரசிடம் தானே இருக்கிறது. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியிலும் மெட்ரோ போட்டுக்கொண்டிருந்தனர். அப்பவும் ஊழல் நடந்திருக்கிறது. அதையும் எடுத்து காட்டியிருக்க வேண்டும். நீங்கள் திமுக ஊழல், சொத்து பட்டியலை வெளியிட்டதுபோல் அதிமுக ஊழல், சொத்து பட்டியலை வெளியிட்டிருக்க வேண்டும்.
நீங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்கள். இந்த அணுகுமுறை சரியில்லை. இந்த பாஜக அரசு, குறிப்பாக மோடியின் அரசு சட்டத்தை அவர்கள் வசதிக்கு ஏற்றவாறு பயன்படுத்துகிறது. தேர்தல் ஆணையம், சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, நீதிமன்றம் இதெல்லாம் தன்னாட்சி அதிகாரம் பெற்றவை என நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். இதெல்லாம் அவருடைய 5 விரல்களாக உள்ளது. அவர் நீட்டினால் நீட்டும், மடக்கினால் மடங்கும்” என்று அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Seeman, Sivagangai, TamilNadu Politics