முகப்பு /செய்தி /சிவகங்கை / கபடி விளையாடியபோது தலையில் அடிபட்டு 16 சிறுவன் உயிரிழப்பு... காரைக்குடியில் அதிர்ச்சி...

கபடி விளையாடியபோது தலையில் அடிபட்டு 16 சிறுவன் உயிரிழப்பு... காரைக்குடியில் அதிர்ச்சி...

மாதிரி படம்

மாதிரி படம்

Sivagangai News : காரைக்குடியில் கபடி விளையாடியபோது 16 வயது சிறுவன் தலையில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Karaikkudi (Karaikudi), India

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரியார் நகர் 3வது வீதி வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்தவர் பிரதாப்(16).

காரைக்குடி செஞ்சை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஊரில் கபடி போட்டி நடைபெற்றது. இதில் காரைக்குடி வைத்திலிங்கபுரம் பகுதியை சேர்ந்த யோகமுனிஸ்வரன் 7 என்ற அணியும், அதே பகுதியை சேர்ந்த கிரிஷ் பிரதர்ஸ் என்ற அணியும் விளையாடின. இதில் 35 புள்ளிகள் பெற்று கிரிஷ் அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது.

இந்நிலையில், யோக முனீஸ்வரர் அணியில் காரைக்குடி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த பிரதாப்(16) என்பவர் அணியில் விளையாடினார். கபடி விளையாடிய பிரதாப் ரெய்டு சென்று மாற்று அணி வீர்களை பிடிக்க முயற்சி செய்தார். அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலை ரப்பர் மேட்டில் அடிபட்டது. பின்னர் சுதாரித்துக்கொண்ட பிரதாப் எழுந்து சென்றார். ஆனால் சிறுது நேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.

இதையும் படிங்க : இந்திய ஓட்டுநர் உரிமத்தை இத்தனை நாடுகளில் பயன்படுத்திக்கொள்ளலாமா..? சுற்றுலா செல்லும்போது யூஸ் பண்ணிக்கோங்க..!

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு  காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரதாப்பை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, பிரதாப்பின் உடல் காரைக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

top videos

    இதுகுறித்து புகாரின்பேரில் காரைக்குடி தெற்கு போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கபடி போட்டியின்போது வீரர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    First published:

    Tags: Crime News, Local News, Sivagangai