விருதுகள்

’நியூஸ் 18 தமிழ்நாடு’ வழங்கும் ’சிகரம் விருதுகள் 2019’

தமிழகத்தின் மகத்தான மனிதர்களை கெளரவிக்க ’மகுடம்’ விருதுகள் விழாவை ஆண்டுதோறும் நடத்தும் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி, புதுச்சேரியில் உள்ள மரியாதைக்குரிய மனிதர்களைப் பாராட்டும் வகையில் ஆண்டுதோறும் சிகரம் விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது.
அதன் அடிப்படையில், இரண்டாவது ஆண்டாக சிகரம் விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.

புதுச்சேரியில் தனி முத்திரைப்பதித்த திறமையாளர்களை அங்கீகரித்து கொண்டாடும் இந்த சிகரம் விருது விழாவில், சிறந்த சமூக சேவகர், விளையாட்டு வீரர், அரசுப்பள்ளி, அரசு மருத்துவர், கலைக்குழு, தொழில்முனைவோர், விவசாயி, கிராமம், விருந்தோம்பல், கல்வியாளர், ப்ரெஞ்ச் கலாச்சார மேன்மை ஆகிய பல்துறைகளில் சாதனையாளர்கள் கெளரவிக்கப்படுகின்றனர்.

சரியான நபர்களுக்கு வழங்கப்படும்போதுதான் விருது அதன் நோக்கத்தை நிறைவு செய்கிறது. இதை மனதில் கொண்டு, எங்கள் செய்திக்குழுவினரின் தேடலோடு, பொதுமக்களிடம் இருந்தும் திறமையாளர்களின் பரிந்துரைகள் பெறப்பட்டன. தொகுக்கப்பட்ட தகுதி வாய்ந்த பரிந்துரைகளில் இருந்து தேர்வாளர்களால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவிக்கிறது நியூஸ் 18 தமிழ்நாடு.

இந்த விழாவில் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்துறை விருந்தினர்கள் பங்கேற்கின்றனர்.

இது புதுவை சாதனையாளர்களை கொண்டாடும் மேடை. மரியாதைக்குரிய மனிதர்களை கெளரவிக்கும் மேடை.

மேலும் வாசிக்க

சிகரம் வெற்றியாளர்கள் - 2019

CONGRATULATIONS
WINNERS

 • சிறப்பு விருது – பிரெஞ்ச் கலாச்சார மேன்மை பிரெஞ்சு ஆய்வு நிறுவனம்
 • சிறந்த கல்வியாளர் R.அனிதா
 • சிறந்த தொழில் முனைவோர் M.அப்துல் காதர்
 • சிறந்த கல்வியாளர் J.கிருஷ்ணமூர்த்தி
 • சிறந்த சமூக சேவை உயிர்த்துளி
 • சிறந்த விருந்தோம்பல் காஷா கி ஆஷா கஃபே
 • சிறந்த விளையாட்டு வீரர் சாய் பிரனிதா
 • சிறந்த அரசுப்பள்ளி பனித்திட்டு அரசு உயர்நிலைப் பள்ளி
 • சிறந்த கிராமம் தொண்டமாநத்தம்.
 • சிறந்த மருத்துவர் Dr.S.ராமசுப்ரமனியன்
 • சிறந்த கலைக்குழு கலைமாமணி ராஜப்பா கலைக்குழு

முன்னோட்டம்

நடுவர் குழு

விளம்பரதாரர்கள்