முகப்பு /செய்தி /சேலம் / ஏற்காட்டில் கோடை மழை.. பூத்து குலுங்கும் காபி பூக்கள்!

ஏற்காட்டில் கோடை மழை.. பூத்து குலுங்கும் காபி பூக்கள்!

ஏற்காடு காபி மலர்கள்

ஏற்காடு காபி மலர்கள்

Yercaud Coffee flowers | ஏற்காட்டில் இந்த ஆண்டு காபி மகசூல் நன்றாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

  • Last Updated :
  • Yercaud, India

ஏற்காட்டில் கோடை மழை தொடங்கிய நிலையில், காபி பூக்கள் பூத்து குலுங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அதிக அளவில் காபி விவசாயம் செய்யப்படுகிறது. ஏற்காட்டில் விளைவிக்கப்படும் காபி இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் ஏற்றுமதி செய்யப்பட்டு சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் பெய்து வரும் கோடை மழையின் காரணமாக இங்கு காபி தோட்டங்களில் உள்ள  காபி செடிகளில் காபி பூ பூக்க தொடங்கியது. இதனால் காபி தோட்டம் முழுவதும் வெள்ளை போர்வை போர்த்தியது போல் காபி பூக்கள் பூத்து குலுங்குகிறது.

மேலும் ஏற்காடு மலைப்பாதையில் உள்ள காபி தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் காபி பூக்களை சுற்றுலா பயணிகள் வாகனத்தில் சென்றவாறு கண்டு மகிழ்கின்றனர்.  காபி செடியில் பூ பூக்க தொடங்கியதால் காபி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்  கடந்த சில நாட்களாக பெய்த லேசான மழையால் காபி செடிகளில் பூக்கள் பூக்க தொடங்கியுள்ளது.

top videos

    மேலும் இதே போல் ஒன்று இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்தால் அந்த பூக்களில் காய் வைக்க வசதியாக இருக்கும். பலத்த மழை பெய்யாமல் இருக்க வேண்டும். அதையும் மீறி பலத்த மழை பெய்தால் தற்போது பூத்துள்ள காபி பூக்கள் கொட்டி வீணாகிவிடும்.  தற்போது உள்ள நிலை நீடித்தால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காபி மகசூல் நன்றாக இருக்கும் என்று காபி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    First published:

    Tags: Agriculture, Coffee, Local News, Salem, Yercaud Constituency