முகப்பு /செய்தி /சேலம் / தனியார் கல்லூரியில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றும் இளம்பெண்..!

தனியார் கல்லூரியில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றும் இளம்பெண்..!

தமிழ்ச்செல்வி

தமிழ்ச்செல்வி

இதேபோல் தமிழ்ச்செல்வி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக ஓட்டுநர் பணியில் உள்ளார்.

  • Last Updated :
  • Salem, India

இவர்தான் தமிழ்ச்செல்வி.சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

பொதுவாக பேருந்து ஓட்டுநர் பணிக்கு ஆண்களை நியமிப்பதே வழக்கமாக இருந்து வருகிறது. சமீபத்தில் கூட கோவையில் ஒரு தனியார் பேருந்தில் பெண் ஒருவர் ஓட்டுநராக நியமிக்கப்பட்டிருந்த செய்தி வைரலானது.

இதேபோல் தமிழ்ச்செல்வி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக ஓட்டுநர் பணியில் உள்ளார். இவரது தந்தை மணி என்பவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த லாரியை கர்நாடக மற்றும் தமிழ்நாடு முழுவதும் ஓட்டி சென்று வேலை பார்த்துள்ளார் தமிழ்ச்செல்வி.

இந்நிலையில் சமீபத்தில் தனியார் கல்லூரியில் ஓட்டுநர் பணி கிடைத்தது. இளம்பெண் ஒருவரை ஓட்டுநராக நியமித்துள்ளது அக்கல்லூரி மாணவிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Facebook Videos, Salem, Woman