ஹோம் /நியூஸ் /சேலம் /

கொலையில் முடிந்த நிலத்தகராறு..சித்தப்பாவை அடித்து கொலை செய்த மகன் கைது - சேலத்தில் பயங்கரம்

கொலையில் முடிந்த நிலத்தகராறு..சித்தப்பாவை அடித்து கொலை செய்த மகன் கைது - சேலத்தில் பயங்கரம்

முதல் படம்: கொலையாளி ராஜி -இரண்டாவது படம் கொலை செய்யப்பட்ட நபர்

முதல் படம்: கொலையாளி ராஜி -இரண்டாவது படம் கொலை செய்யப்பட்ட நபர்

Salem Thalaivasal Murder Case | மனைவியை தாக்கியதால் சித்தப்பாவை ஆத்திரத்தில் எலும்பு முறியும் அளவுக்கு அடித்து கொன்று தலைமறைவானர் ராஜீ.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம்  மாவட்டம் தலைவாசல்  அருகே உள்ள கோவிந்தபாளையம், பள்ளிபாளையம்  கிராமத்தைச்  சேர்ந்தவர்  ராஜீ. அதே ஊரில் அவரது சித்தப்பா பூசமுத்து என்பவர் (வயது 63) வசித்து வருகிறார். இருவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது.  இந்நிலையில்  கடந்த 6-ம் தேதி ராஜீயின் மனைவி முத்தம்மாளுக்கும் பூசமுத்துவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பூசமுத்து முத்தம்மாளை தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த முத்தம்மாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் மனைவி முத்தம்மாளை தாக்கியதால் ஆத்திரமடைந்த ராஜி, சித்தப்பா பூசமுத்துவை தட்டிக்கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக  கடந்த 7ம் தேதி அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  கைகலப்பாகி இருவரும் தாக்கிக்கொண்டனர். ராஜீ தாக்கியதில் பூசமுத்துவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் விலகி விட்டுள்ளனர். மேலும் வலியால் துடித்த பூசமுத்துவை சிகிச்சை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தலைவாசல் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து தலைமறைவான ராஜீயை கைது செய்து ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Crime News, Local News, Salem, Tamil News