முகப்பு /செய்தி /சேலம் / கழிவுநீர் கால்வாயில் விழுந்த கர்ப்பிணி பெண் உயிரிழப்பு... சேலத்தில் பரபரப்பு!

கழிவுநீர் கால்வாயில் விழுந்த கர்ப்பிணி பெண் உயிரிழப்பு... சேலத்தில் பரபரப்பு!

உயிரிழந்த கர்ப்பிணி பெண்

உயிரிழந்த கர்ப்பிணி பெண்

salem death | கழிவுநீர் கால்வாயில் முறையான பராமரிப்பு இல்லாததே கர்ப்பிணி பெண் இறப்புக்கு காரணம் என்று உறவினர்கள் வேதனை.

  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் கழிவுநீர் கால்வாயில் கர்ப்பிணி பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்பேத்கர் காலனியை சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி சந்தியா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர், நேற்று மாலை வீட்டின் முன்பு இருந்த குப்பைகளை அகற்றிக்கொண்டிருந்த போது வாந்தி எடுத்தார். அப்போது மயக்கம் ஏற்பட்ட நிலையில் கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கழிவுநீர் கால்வாயை முறையாக பராமரிக்காததே உயிரிழப்பிற்கு காரணம் என உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

top videos
    First published:

    Tags: Death, Local News, Salem