முகப்பு /செய்தி /சேலம் / 80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை... 30 வயது இளைஞருக்கு போலீஸ் வலை... சேலத்தில் அதிர்ச்சி...

80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை... 30 வயது இளைஞருக்கு போலீஸ் வலை... சேலத்தில் அதிர்ச்சி...

மாதிரி படம்

மாதிரி படம்

மூதாட்டி கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த பூலாம்பட்டி போலீசார் தனிப்படை அமைத்து  போதை ஆசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை தந்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் இருப்பாளி பகுதியைச் சேர்ந்த 80 வயது  மூதாட்டி  அங்குள்ள கந்தன் மாரியம்மன் கோவில் திருவிழாவில் நடைபெற்ற தெருக்கூத்தை பார்த்துவிட்டு நேற்று இரவு சுமார் 11 மணியளவில் ஜலகண்டாபுரம் சாலையில் கால்நடை மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது,  அங்கு மறைந்திருந்த அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க போதை ஆசாமி ஒருவர், மூதாட்டியை அங்குள்ள தென்னந் தோப்புக்குள் தூக்கிச்சென்று பாலியல்  வன்புணர்வில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க; சூதாட்டத்தில் தோல்வி... மனைவியை நண்பருடன் உடலுறவு கொள்ள வற்புறுத்திய கணவன்... பகீர் சம்பவம்...!

நடந்த  சம்பவத்தை அந்த மூதாட்டி உறவினர்களிடம் கூறியதை தொடர்ந்து உடனடியாக எடப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து மூதாட்டி கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த பூலாம்பட்டி போலீசார் தனிப்படை அமைத்து  போதை ஆசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

செய்தியாளர் - கோகுல கண்ணன்

First published:

Tags: Salem, Sexual harassment