முகப்பு /செய்தி /சேலம் / பாக்கெட் சாராயம் விற்பனை - சேலத்தில் 110 லிட்டர் சாராயத்துடன் வியாபாரி கைது...

பாக்கெட் சாராயம் விற்பனை - சேலத்தில் 110 லிட்டர் சாராயத்துடன் வியாபாரி கைது...

கைது செய்யப்பட்ட சாராய வியாபாரி

கைது செய்யப்பட்ட சாராய வியாபாரி

இளைஞர் ஒருவர் பாக்கெட் சாராயத்தைக் குடிப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில்  வைரலானதை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Last Updated :
  • Salem, India

சேலத்தில் பாக்கெட் சாராய விற்பனையில் ஈடுபட்டவர் 110 லிட்டர் சாராயத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே புனல்வாசல் பகுதியில் சாக்கு மூட்டையில் வைத்து ஒருவர் கள்ள சாராய விற்பனை செய்து வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பணத்தை பெற்றுக் கொண்டு விற்பனை செய்வதும், சாராயம் விற்பனை  செய்யும் இடத்தில் இளைஞர் ஒருவர் பாக்கெட் சாராயத்தை  குடிப்பது போன்று அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.

இதையும் படிங்க: 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுகிறது ஆர்பிஐ: வெளியானது அதிரடி அறிவிப்பு

top videos

    இதனையடுத்து சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் உத்தரவின்பேரில் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக ஆத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீரகனூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட காமராஜ் நகர் பகுதியில் நேற்று மாலை 5 மணிக்கு விவசாய நிலத்தில் சுமார் 110 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்த புனல்வாசல் பகுதியை சேர்ந்த குமரேசன் (40) என்பவரை கைது செய்தனர்.

    First published:

    Tags: Crime News, Salem