முகப்பு /செய்தி /சேலம் / சேலம் மாவட்டத்தை 3 ஆக பிரிக்க வேண்டும்... சட்டமன்றத்தில் பாமக எம்.எல்.ஏ கோரிக்கை...!

சேலம் மாவட்டத்தை 3 ஆக பிரிக்க வேண்டும்... சட்டமன்றத்தில் பாமக எம்.எல்.ஏ கோரிக்கை...!

சேலம் மாவட்டம்

சேலம் மாவட்டம்

பெரிய மாவட்டங்களை சிறியதாக பிரித்தால் நிர்வாகம் சிறப்பாக இருக்கும் என சேலம் எம்.எல்.ஏ அருள் சட்டமன்றத்தில் பேசினார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சேலம் மாவட்டத்தை 3 மாவட்டங்களாக பிரிக்க வேண்டுமென சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற  உறுப்பினர் அருள் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிதித்துறை மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள், பெரிய மாவட்டங்களை சிறியதாக பிரித்தால் நிர்வாகம் சிறப்பாக இருக்கும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை என்றும், அதனை ஏற்று கடந்த ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி பெரிய மாவட்டங்களை பிரித்தார் என்றும் கூறினார்.

அதேபோல தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் உள்ள  11 தொகுதிகளில் 4 தொகுதிக்கு ஒரு மாவட்டம் என்ற அடிப்படையில்  3 மாவட்டங்களாக பிரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் வாசிக்க: விசாரணைக் கைதிகள் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் - சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்

தொடர்ந்து பேசிய அவர், பொதுமக்கள் சந்திப்பு மற்றும் தங்களின் தொகுதியினை பார்வையிடுவதற்கு ஏதுவாக அரசு சார்பில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார்  வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

top videos
    First published:

    Tags: Salem