முகப்பு /செய்தி /சேலம் / திருமணம் முடிந்தவுடன் மணக்கோலத்தில் தேர்வெழுதிய பெண்... சேலத்தில் நெகிழ்ச்சி!

திருமணம் முடிந்தவுடன் மணக்கோலத்தில் தேர்வெழுதிய பெண்... சேலத்தில் நெகிழ்ச்சி!

மணக்கோலத்தில் தேர்வெழுதிய பெண்

மணக்கோலத்தில் தேர்வெழுதிய பெண்

திருமணம் முடிந்த கையோடு, திருமண கோலத்தில் தேர்வுக்கு  வந்த மாணவி...தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் வைரலாகி வருகிறது...

  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த மின்னாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த தமிழ் இலக்கியா. இவர், வாழப்பாடி அடுத்த பருத்திக்காடு பகுதியில் உள்ள சேலம் கிறிஸ்துவ கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ ஆங்கிலம் முதுநிலை படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இதனிடையே இவருக்கு, ஆனந்த் என்பருடன்  திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இன்று  திருமணமாகியுள்ளது. இந்நிலையில், இன்று தமிழ் இலக்கியாவிற்கு செமஸ்டர் தேர்வு நடைபெறவிருந்தது.

இதனால், திருமணம் முடிந்தவுடன், வரவேற்பில் கூட கலந்து கொள்ளாமல், திருமண கோலத்தில் இன்று காலை 10 மணி அளவில் தேர்வுக்கு வந்துள்ளார். இதைப் பார்த்த சக மாணவிகள், ஆசிரியர்கள் ஆச்சரியத்துடன் மாணவி தமிழ் இலக்கியாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

திருமணம் ஆன நிலையில், அதே கோலத்தில் மாணவி தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

top videos
    First published:

    Tags: Exam, Marriage, Salem