முகப்பு /செய்தி /சேலம் / தீம் பார்கில் தண்ணீரில் விளையாடிய சேலம் சிறுவன் மரணம் - உயிரிழப்புக்கு காரணம் என்ன?

தீம் பார்கில் தண்ணீரில் விளையாடிய சேலம் சிறுவன் மரணம் - உயிரிழப்புக்கு காரணம் என்ன?

சேலம் சிறுவன் மரணம்

சேலம் சிறுவன் மரணம்

.தண்ணீரில் அதிக அளவில் குளோரின் கலக்கப்பட்டிருந்ததும், முதலுதவி வசதியோ ஆம்புலன்ஸோ இல்லாததே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு.

  • Last Updated :
  • Salem, India

சேலம் மாநகர் கிச்சிப்பாளையம் பகுதி  எருமாபாளையம் சாலையில்  ரஞ்சித் - உஷா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சௌடேஸ்வரன், துவேஸ்வரன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அதே பகுதியில்  பகுதியில் உணவகம் வைத்து நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இரண்டு மகன்களை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே உள்ள பரவச உலகம் என்ற தனியார் தீம் பார்க்கில் மகன்களின் பள்ளி விடுமுறை கொண்டாடத்திற்காக சென்றுள்ளனர். காலை சுமார் 11 மணி முதல் விளையாடிய சிறுவர்கள் மதிய உணவிற்கு பிறகும் தொடர்ந்து விளையாடியுள்ளனர்.

தண்ணீரிலிருந்து வெளியே வந்த தனக்கு மூச்சு விட சிரமாக இருப்பதாகவும், மயக்கம் வருவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகின்றது. சிறிது நேரத்தில் திடீரென மயங்கி விழுந்த சௌடேஸ்வரனை உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்த மருத்துவர்கள் செளடேஸ்வரன் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.  பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற் கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  பள்ளி விடுமுறையை  மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக தீம் பார்க் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : கல்லட்டியில் கார்களுக்கு நடுவே பாய்ந்த புலி - மிரண்டுபோன சுற்றுலா பயணிகள்

நேற்றுமுன்தினம் அதிகப்படியான கூட்டம் இருந்ததாகவும், தண்ணீர் கலங்கிய நிலையில் இருந்ததாகவும் கூறும் சிறுவனின் தந்தை ரஞ்சித், இந்த தண்ணீரில் அதிக அளவில் குளோரின் கலக்கப்பட்டிருந்ததால் தான் தனது மகன் உயிரிழந்துவிட்டதாகவும், இது போன்று மற்றொரு உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

உயிரிழப்புக்கு காரணம் என்ன..?

இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர் செல்வகளஞ்சியம் கூறும் போது, குழந்தைகளுக்கு காலை முதல் மாலை வரை  தண்ணீரில் விளையாட ஆர்வம் இருக்கும். ஆனால் உடல் சோர்வு ஏற்படும். அவ்வப்போது இடைவெளி விட்டு ஆசுவாசப்படுத்தி கொள்ள வேண்டும்.  அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து விளையாடியதாலும் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம்.

அதே போல் உணவு உண்ட பின் தண்ணீரில் விளையாடும் போது, உணவு குழாய் வழியாக உணவு திரும்பி வந்து மூச்சுக் குழாய்க்கு செல்லவும் வாய்ப்புள்ளது. அல்லது விளையாடும் போது அங்கிருந்த தண்ணீர் கூட மூச்சுக்குழாய்க்குள் சென்று நுரையீரலை பாதித்திருக்கலாம். எனவே நம்முடைய மேற்பார்வையில் மட்டுமே குழந்தைகள் இது போன்ற விளையாட்டுகளை விளையாட அனுமதிக்க வேண்டும் என்றார்.  தண்ணீரில் குளோரின் கலக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்பு என்றால் மேலும் பலருக்கு ஏற்பட்டிருக்கும். ஒருவருக்கு மட்டும் பாதிப்பு என்பதால் குளோரின் காரணமாக இருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.

top videos

    முதலுதவி மையமோ, அவசர ஆம்புலன்ஸ் வசதியோ இருந்திருந்திருந்தால் சிறுவனின் உயிர் காப்பற்றப்பட்டிருக்கும். எனவே இதுபோன்ற அதிக மக்கள் கூடும் கேளிக்கை பூங்காக்களில் உரிய பாதுகாப்பு வசதிகளை அரசு தலையிட்டு உறுதிபடுத்தவேண்டும் என்பது உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.

    First published:

    Tags: Children, Salem, Theme parks