முகப்பு /செய்தி /சேலம் / திருமணமாகாமல் கர்ப்பம்... 7 மாதத்தில் அறுவை சிகிச்சை செய்ததால் இளம்பெண் பரிதாப பலி..!

திருமணமாகாமல் கர்ப்பம்... 7 மாதத்தில் அறுவை சிகிச்சை செய்ததால் இளம்பெண் பரிதாப பலி..!

மருத்துவமனை

மருத்துவமனை

Salem death | வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் திருமணம் ஆகாமலேயே கருவுற்றதாக கூறப்படுகிறது.

  • Last Updated :
  • Salem, India

திருமணமாகாமல் கருவுற்ற இளம்பெண்ணுக்கு ஏழு மாதத்தில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்  செய்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த  19 வயது பெண் திருமணம் ஆகாமலேயே கருவுற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வாழப்பாடியில் உள்ள நிகாரிகா என்ற தனியார் மருத்துவமனையில் இளம்பெண்ணை அவரது பெற்றோர் அனுமதித்துள்ளனர். கருவுற்று ஏழு மாதங்கள் ஆன நிலையில் தனியார் மருத்துவமனையில் இளம்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வரும் வழியிலேயே இளம்பெண்  பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே ஏழு மாத சிசுவும் இறந்து விட்டதாக தனியார் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட போது இறந்ததாக கூறப்பட்ட சிசுவின் உடலில் அசைவு இருந்துள்ளது.

உடனடியாக சிசுவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து குழந்தை அரசு மருத்துவமனையில் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து இதுவரை புகார் ஏதும் அளிக்கப்படாத நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் தனியார் மருத்துவர் செல்வாம்பாள் என்பவரை காவல் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

First published:

Tags: Death, Pregnant, Salem