முகப்பு /செய்தி /சேலம் / திடீரென சரிந்த பாமக மேடை... உடனே சுதாரித்த அன்புமணி ராமதாஸ்... காயமின்றி தப்பினார்..!

திடீரென சரிந்த பாமக மேடை... உடனே சுதாரித்த அன்புமணி ராமதாஸ்... காயமின்றி தப்பினார்..!

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி பங்கேற்ற நிகழ்ச்சியின் மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Last Updated :
  • Salem, India

பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். அதன்பிறகு அனைத்து மாவட்டங்களிலும் தீவிர சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்சியினரிடையே பேசி வருகிறார். அந்த வகையில் தற்போது சேலம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் சேலம் வாழப்பாடி பகுதியில் பாமக கட்சிக் கொடி ஏற்று விழா இன்று பிற்பகல் நடைபெற்றது. விழா மேடையில் ஏறிய அன்புமணி ராமதாஸுக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக திடீரென மேடை சரிந்து விழுந்ததில் அனைவரும் கீழே விழுந்தனர். எனினும் கீழே விழுந்தவர்கள் அனைவருக்கும் எந்த காயமும் இன்றி தப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து வழக்கம்போல தொண்டர்கள் மத்தியில் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார்.

top videos
    First published:

    Tags: Pmk anbumani ramadoss, Salem