முகப்பு /செய்தி /சேலம் / கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய் கைது...!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய் கைது...!

கைது செய்யப்பட்ட தாய் மற்றும் க்ள்ளக் காதலன்

கைது செய்யப்பட்ட தாய் மற்றும் க்ள்ளக் காதலன்

Salem | சேலம் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை கொன்ற தாய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

  • Last Updated :
  • Salem, India

கோவை மாவட்டம் வடவள்ளியைச் சார்ந்தவர் கலைவாணி (வயது 27) இவருக்கு ஒரு வயது பெண் குழந்தை இருந்தது. கலைவாணிக்கும் அவரது கணவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டு கலைவாணி தனியே வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு கலைவாணி ஈரோடு மாவட்டம் பன்னாரி அம்மன் கோவிலுக்கு சென்றார். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சார்ந்த மல்லேஷ் (வயது 30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

பின்னர் மல்லேஷ், கலைவாணியையும் ஒரு வயது பெண் குழந்தையும் தேன்கனிக்கோட்டைக்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந்தார். இதனிடையே கடந்த மாதம் மல்லேஷும் கலைவாணியும் சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதிக்கு வந்து அங்குள்ள செங்கல் சூளையில் கூலி வேலைக்குச் சேர்ந்தனர். இருவரும் தங்களை கணவன் மனைவி என்று கூறி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் நள்ளிரவில் கலைவாணியும் மல்லேஷும் குழந்தையை அடித்து விட்டதாக தெரிகிறது. குழந்தை அழும் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கம் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். அப்போது கலைவாணி தனது குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என தெரிவித்துள்ளார். பின்னர் கலைவாணியும் மல்லேஷும் பெண் குழந்தையை தூக்கி வந்து சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு இருவரும் மருத்துவமனையில் குழந்தையை விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் குழந்தை நேற்று இறந்து விட்டது. இந்த குழந்தை உயிரிழப்பு குறித்து தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் குழந்தையின் உடலில் காயம் இருந்ததும், தாக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் சோதனையில் தெரிய வந்தது.

மேலும் படிக்க... ”ஒரு காஃபி சாப்பிட சொன்னார்...“ - சபரீசனுடனான சந்திப்பு பற்றி ஓபிஎஸ் விளக்கம்..!

top videos

    போலீசாரின் விசாரணையில்  கலைவாணியும் மல்லேசும் குழந்தையை அடித்து துன்புறுத்தியதால் உயிரிழந்தது தெரியவந்தது. இதனை அடுத்து தாரமங்கலம் போலீசார் செங்கல் சூளைக்கு சென்று அங்கிருந்த கலைவாணி மற்றும் கள்ளக்காதலன் மல்லேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கலைவாணி சேலம் பெண்கள் கிளை சிறையிலும் மல்லேஷ் சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

    First published:

    Tags: Child, Mother arrested, Salem