முகப்பு /செய்தி /சேலம் / சேலத்தில் கூடைப்பந்து போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தடுமாறி விழுந்த அமைச்சர் கே.என்.நேரு

சேலத்தில் கூடைப்பந்து போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தடுமாறி விழுந்த அமைச்சர் கே.என்.நேரு

கே.என்.நேரு

கே.என்.நேரு

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மேடை ஏறும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

  • Last Updated :
  • Salem, India

சேலம் மாநகரில் மகாத்மா காந்தி உள்விளையாட்டு அரங்கில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேசிய அளவிலான பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற்று வந்தது. இந்த விளையாட்டுப் போட்டியின் இறுதி விழாவில் அமைச்சர் கே.என் நேரு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், கௌதம சிகாமணி, எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே.என் நேரு மேடை ஏறும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அருகில் இருந்த நிர்வாகிகள் அவரை தூக்கிவிட்டு பாதுகாப்பாக மேடைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்.

கீழே விழுந்த போதிலும்  நிகழ்ச்சியில் இறுதிவரை கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி புறப்பட்டுச் சென்றார்.

செய்தியாளர்: திருமலை, சேலம்.

First published:

Tags: KN Nerhu