முகப்பு /செய்தி /சேலம் / கல்லால் அடித்து கூலி தொழிலாளி கொலை... சேலம் அருகே பயங்கரம்

கல்லால் அடித்து கூலி தொழிலாளி கொலை... சேலம் அருகே பயங்கரம்

கொலையான வீடு

கொலையான வீடு

சேலம் அருகே  கூலி தொழிலாளி கொலை...ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை...

  • Last Updated :
  • Salem, India

சேலம் அருகே செங்கல் அணை பகுதியில் கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்டு வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.  சடலத்தை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.

சேலம் பொன்னம்மாப்பேட்டை அருகே உள்ளது செங்கல் அணை பகுதி . இந்த பகுதியைச் சேர்ந்தவர் ராஜகணபதி ( வயது 47). இவர் ஒரு கூலிதொழிலாளி. ராஜகணபதியின் மனைவி மீனா கடந்த 15 வருடத்திற்கு முன்பு தகராறு செய்து கொண்டு தனியே சென்று விட்டார். இதனால் ராஜகணபதி அவரது அண்ணன் செல்வம் வீட்டில் வசித்து வந்தார். கீழ் வீட்டில் ராஜகணபதியும் மேல் மாடியில் அண்ணன் செல்வமும் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் ராஜகணபதி இன்று அதிகாலை வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதைப் பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் உடனே சேலம் அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனையடுத்து உதவி கமிஷனர் சரவணகுமார் மற்றும் காவல் ஆய்வாளர் கணேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர்.

அப்போது விசாரணையில் , கூலி தொழிலாளி ராஜகணபதி கல்லால் தலையில் தாக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் ராஜ கணபதியின் அண்ணன் செல்வம் மற்றும் அவரது மனைவி ஆகியோரை அழைத்துச் சென்று விசாரித்தனர். செல்வத்தின் மனைவி தேவி நேற்று அம்மாப்பேட்டை காவல் நிலையம் வந்து புகார் மனு கொடுத்தார்.

மேலும் படிக்க... VIDEO: சாய் பல்லவியா இது? எவ்ளோ குட்டிப்பொண்ணா இருக்காங்க! - டான்ஸை பார்த்து மிரண்டுபோன

இதில் ராஜகணபதி மது குடித்துவிட்டு வந்து தினமும் தகராறு செய்வதாகவும், அவரை அழைத்து விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் . இந்த நிலையில் ராஜகணபதி கொலை செய்யப்பட்டு உள்ளார். சொத்து தகராறில் ராஜகணபதி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணத்தால் கொலை செய்யப்பட்டாரா? என தற்போது விசாரணை நடக்கிறது.

top videos

    கொலையில் துப்பு துலங்க சேலம் மாநகர காவல் ஆணையாளர் ராஜேஸ்வரி தனிப்படை அமைத்துள்ளார்.  இதில் துணை கமிஷனர் கௌதம் கோயல் மற்றும் போலீசார் இடம் பெற்று விசாரித்து வருகின்றனர்.

    First published:

    Tags: Crime News, Salem