சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள ஆவடத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி ஜனார்த்தனன் (வயது27), பவித்ரா (24). இவர்கள் இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளையொட்டி, குடும்பத்துடன் எடப்பாடி அருகே பூலாம்பட்டி சென்றுள்ளனர்.
காவிரி ஆற்றில் இரண்டு குழந்தைகளையும் ஆற்றங்கரையில் அமர வைத்துவிட்டு குளிக்க சென்றுள்ளனர். இதில் கணவன், மனைவி இருவரும் குளித்துக் கொண்டிருக்கும் போது, நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாய் தந்தை இருவரும் காவிரியில் குளித்துவிட்டு கரைக்கு வருவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த இரண்டு குழந்தைகள் பரிதவித்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருவரின் உடலை மீட்ட பூலாம்பட்டி போலீசார் பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து பூலாம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க... ரயில் விபத்துக்கு திட்டமிட்ட சதி காரணமா...? சிபிஐ விசாரணைக்கு ரயில்வே அமைச்சகம் பரிந்துரை...!
இரண்டு குழந்தைகளை விட்டு தாய் தந்தை காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Dead, Husband Wife, Salem