முகப்பு /செய்தி /சேலம் / கணவன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவி - சேலத்தில் அதிர்ச்சி

கணவன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவி - சேலத்தில் அதிர்ச்சி

சேலம் கொலை

சேலம் கொலை

சேலத்தில் குடும்பத்தகராறில் கணவனை கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

  • Last Updated :
  • Salem, India

சேலத்தில் கணவனின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் ஜாகிரெட்டிப்பட்டி ரயில்வே லைன் பகுதியில்  ரமேஷ் மணிமேகலை தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரமேஷ் மூட்டை தூக்கும் தொழில் செய்து வருகிறார் இந்த நிலையில் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் ரமேஷ் சண்டை போட்டதாக தெரிகிறது. மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தினந்தோறும் மணிமேகலையை அடித்து உதைத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவி மீது சந்தேகம் ஏற்பட்ட ரமேஷ் மணிமேகலையை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிமேகலை வீட்டிலிருந்து குளவி கல்லை எடுத்து ரமேஷை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் கை தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டு ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு பிரேதத்தை கைப்பற்றி மணிமேகலையை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் : திருமலை தமிழ்மணி ( சேலம்)

First published:

Tags: Crime News, Death, Murder, Salem