முகப்பு /செய்தி /சேலம் / அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது... சேலத்தில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வாக்குவாதம்!..

அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது... சேலத்தில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வாக்குவாதம்!..

சேலத்தில் அதிமுக கொடி நட்டு வந்த ஓபிஎஸ் தரப்பினர்

சேலத்தில் அதிமுக கொடி நட்டு வந்த ஓபிஎஸ் தரப்பினர்

தகவல் அறிந்த சேலம் டவுன் போலீசார் உடனடியாக இரு தரப்பினரையும் விலக்கி விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Last Updated :
  • Salem, India

அதிமுக கொடியை பயன்படுத்தும் விவகாரம் தொடர்பாக சேலத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

சேலம் மாநகர் பேலஸ் தியேட்டர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பில் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற இருந்தது. இதற்காக இந்த கூட்டம் நடைபெறும் மண்டபத்தின் முன்பாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சாலையில் இருபுறங்களிலும் அதிமுக கொடி கம்பங்களை நடும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் பின்தங்கியநிலையில் வட மாவட்டங்கள்... வெள்ளை அறிக்கை வெளியிட ராமதாஸ் வலியுறுத்தல்...

 இதனை அறிந்த அதிமுக இபிஎஸ் அணியினர்  உடனடியாக சுப்பராயன் சாலையில் கொடிக்கம்பங்களை நடும் பகுதிக்கு சென்று, அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என்று கூறி அவற்றை அகற்றினர். இதனை அடுத்து ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்த தகவல் அறிந்த சேலம் டவுன் போலீசார் உடனடியாக இரு தரப்பினரையும் விலக்கினர். காவல்துறையினரின் தலையிட்டால் அங்கு நிகழவிருந்த மோதல் தவிர்க்கப்பட்டது . பின்னர் இரு தரப்பினரும் சேலம் மாநகர காவல் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

top videos

    செய்தியாளர் - திருமலை தமிழ்மணி

    First published:

    Tags: Local News, OPS - EPS, Salem