முகப்பு /செய்தி /சேலம் / காவிரி ஆற்றில் மூழ்கி 4 கல்லூரி மாணவர்கள் பலி... சேலத்தில் பரிதாபம்..!

காவிரி ஆற்றில் மூழ்கி 4 கல்லூரி மாணவர்கள் பலி... சேலத்தில் பரிதாபம்..!

மாணவர்கள் பலி

மாணவர்கள் பலி

கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 10 பேர், கல்வடங்கம் காவிரி ஆற்றில் இறங்கி உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக மணிகண்டன், முத்துசாமி, பாண்டியராஜன் மற்றும் மணிகண்டன்ஆகிய 4 மாணவர்கள் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு தண்ணீரில் தத்தளித்தனர். நீச்சல் தெரியாததால் அவர்கள் 4 பேரும் நீரில் மூழ்கினர். அவர்களை காணாததால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனே கரையேறி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டதில், இடங்கணசாலை பகுதியைச் சார்ந்த மணிகண்டன் மற்றும் முத்துசாமி ஆகியோர்  சடலங்களாக மீட்டகப்பட்டனர்.

எஞ்சிய இருவரையும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

top videos
    First published:

    Tags: CM MK Stalin, Edappadi Constituency