முகப்பு /செய்தி /சேலம் / ஏற்காட்டில் பார்வையாளர்களை கவர்ந்த கொழு கொழு குழந்தைகள் போட்டி...!

ஏற்காட்டில் பார்வையாளர்களை கவர்ந்த கொழு கொழு குழந்தைகள் போட்டி...!

கொலு கொலு குழந்தை போட்டியில் கலந்து கொண்ட குழந்தைகள்

கொலு கொலு குழந்தை போட்டியில் கலந்து கொண்ட குழந்தைகள்

ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

  • Last Updated :
  • Yercaud, India

ஏற்காடு கோடை விழாவை முன்னிட்டு கொழு கொழு குழந்தைகள் போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 46வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 21ம் தேதி தொடங்கியது. 28ம் தேதி  வரை நடைபெற உள்ள இந்த கோடை விழாவை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்து வருகின்றனர். ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டி நடத்தப்படுகிறது.

அதன்படி ஐந்தாவது நாளான இன்று மகளிர் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் இணைந்து ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் குழந்தைகளுக்கான போட்டிகள் நடத்தினர்.இந்த போட்டியில் ஏற்காட்டில் உள்ள சுமார் 30 குழந்தைகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: School reopen | பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. தள்ளிப்போனது பள்ளிகள் திறப்பு.. எப்போது தெரியுமா?

top videos

    இதில் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, நடனம், திருக்குறள் வாசிப்பு, பாட்டு போட்டி ஆகியவை நடத்தப்பட்டன. ஒன்றரை வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான கொழுகொழு குழந்தை போட்டியில் குழந்தைகளின் எடை, உயரம், ஆரோக்கியம், செயல்பாடுகள் ஆகியவை கணக்கெடுக்கப்பட்டு சிறந்த குழந்தைகளை தேர்ந்தெடுத்தனர்.  இப்போட்டியில் தங்கள் குழந்தைகளை பங்கேற்க வைப்பதற்காக பெற்றோர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர்.

    First published:

    Tags: Salem