முகப்பு /செய்தி /சேலம் / சொத்து தகராறில் தம்பியை கட்டையால் அடித்து கொன்ற அண்ணன்... சேலத்தில் கொடூரம்

சொத்து தகராறில் தம்பியை கட்டையால் அடித்து கொன்ற அண்ணன்... சேலத்தில் கொடூரம்

முதல் படம்: குற்றவாளி 
 2வது படம்; கொலை செய்யப்பட்ட தம்பி

முதல் படம்: குற்றவாளி 2வது படம்; கொலை செய்யப்பட்ட தம்பி

சேலத்தில் சொத்து தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

  • Last Updated :
  • Salem, India

சேலம் பொன்னம்மாபேட்டை முத்துமாரியம்மன் கோவில் செங்கல் அணை ரோட்டைச் சேர்ந்தவர் ராமசாமி, பாக்கியம் தம்பதியினர்.  இவர்களுக்கு செல்வம், ராஜகணபதி என்ற இரண்டு மகன்களும் மாலா என்ற ஒரு மகளும் உள்ளனர். செல்வமும் ராஜகணபதியும் கூலித் தொழில் செய்து வரும் நிலையில் அவர்களுக்கு மது பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

செல்வத்துக்கு ஸ்ரீதேவி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இதேபோல் ராஜகணபதி மும்பையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே அவரது மனைவி குழந்தைகளுடன் அவரைப் பிரிந்து சென்று விட்டார்.

இந்த நிலையில் செல்வம் தனது தந்தையின் பெயரில் உள்ள நிலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக வீடு கட்டி முதல் மாடியில் அவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கீழ்தளத்தில் ராஜ கணபதியும், அவரது தாய் பாக்கியமும் வசித்து வந்தனர். இதனிடையே ராஜகணபதி தனக்கு சேரவேண்டிய சொத்தை பிரித்துக் கொடுக்குமாறு செல்வத்திடம் கேட்டு அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.

இதையும் படிங்க: ரஜினி குறித்து தொடர் விமர்சனம்- செய்தியாளர் கேள்விக்கு ரோஜா கொடுத்த ரியாக்ஷன்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜகணபதி செல்வத்தின் மனைவி ஸ்ரீதேவியை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அப்போது போலீஸாரிடம் ஸ்ரீதேவி சொத்து கேட்டு ராஜ கணபதி அடிக்கடி தகராறு செய்து வருவதுடன் வீட்டில் உள்ள சமையல் கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் அவரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் ராஜகணபதி இனிமேல் எந்த பிரச்சனையும் செய்ய மாட்டேன் என்று எழுதிக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்வம் ராஜா கணபதி ஆகியோரிடையே சொத்து பிரச்னை காரணமாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த செல்வம் அங்கிருந்து செங்கல் மற்றும் உருட்டு கட்டையால் ராஜகணபதியின் தலை மற்றும் முகத்தில் சரமாரியாக அடித்துள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த ராஜகணபதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை குறித்து அப்பகுதி மக்கள் அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் காவல் துணை ஆணையாளர் கௌதம் கோயல் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

top videos

    இதனையடுத்து ராஜகணபதியின் உடலை போலீசார் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக செல்வத்தை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சொத்து கேட்டு தகராறு செய்து வந்ததால் தம்பியை தானே அடித்து கொலை செய்ததை விசாரணையில் ஒப்புக்கொண்டார். இதை அடுத்து செல்வத்தை போலீசார் கைது செய்தனர். சொத்து தகராறு தம்பியை அண்ணனே அடித்துக் கொலை செய்த சம்பவம் சேலத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    First published:

    Tags: Salem