முகப்பு /செய்தி /சேலம் / "அப்போதும்.. இப்போதும்; அதிமுக டெல்லி சொல்வதையே கேட்கிறது..!" - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

"அப்போதும்.. இப்போதும்; அதிமுக டெல்லி சொல்வதையே கேட்கிறது..!" - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

ஆளுநரின் உரை அவைக்குறிப்பில் இடம்பெறாது என்று முதலமைச்சர் கூறியது கோவத்தின் வெளிப்பாடு அல்ல; அது சுயரியாதையின் அடையாளம் - உதயநிதி ஸ்டாலின்

  • Last Updated :
  • Salem, India

டெல்லி சொல்வதையே கேட்கிறது அதிமுக என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இது தமிழ்நாடு என்ற தலைப்பில் இரண்டு நாள் மாநாடு சேலத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டை ஒட்டி கருங்கல்பட்டி பகுதியில் இருந்து தாதகாப்பட்டி வரை கருஞ்சட்டை பேரணி கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. இந்த பேரணியில் 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து தாதகாப்பட்டி மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர்,  பாசிச சக்திகள் ஒருபோதும் தமிழ்நாட்டில் காலடி பதிக்க முடியாது.பாஜக போன்ற கட்சிகளை கண்ணுக்கு தெரியாத தடுப்புச்சுவர் தடுக்கிறது. அதில் மோதி மோதி மூக்குடைந்து போகிறார்கள். மற்ற மாநிலங்கள் சனாதன சக்திகள் அரசியல் எதிரிகள்; தமிழ்நாட்டில் மட்டும் கொள்கை ரிதியிலான எதிரிகளாக உள்ளனர். அதிமுக ஆட்சி நடந்திருந்தால் தமிழ்நாட்டின் பெயர் மாறியிருக்கும்.

இதையும் படிங்க :  "கொலைக்களமாக மாறிவிட்டது தமிழ்நாடு" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று மாநாடு நடத்தப்பட்டு இருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். கட்டம் சரியில்லை என்று கூறிய ஆருடங்களை தகர்த்து, நாடு போற்றும் ஆட்சி நடத்தி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.ஆளுநரின் உரை அவைக்குறிப்பில் இடம்பெறாது என்று முதலமைச்சர் கூறியது கோவத்தின் வெளிப்பாடு அல்ல; அது சுயரியாதையின் அடையாளம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் நெருக்கடி நிலை காலத்தில் மாநில கட்சிகள் தடைசெய்யப்படும் என்று டெல்லியில் இருந்து அறிவிப்பு வந்தது.அப்போதுதான் அதிமுக அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமாக மாற்றப்பட்டது. ஆனால் அப்போதும் திமுக, திமுகவாகவே இருந்தது. அப்போதும் அதிமுக டெல்லி சொன்னதையே கேட்டது. இப்போதும் அதிமுக டெல்லி சொல்வதையே கேட்கிறது என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

top videos

    செய்தியாளர் : திருமலை தமிழ்மணி (சேலம்)

    First published:

    Tags: ADMK, DMK, Politics, Tamil News, Udhayanidhi Stalin