முகப்பு /செய்தி /சேலம் / பிரசவத்தின்போது உயிரிழந்த 17 வயது சிறுமி... சேலம் தனியார் மருத்துவமனை மீது போக்சோ வழக்கு!

பிரசவத்தின்போது உயிரிழந்த 17 வயது சிறுமி... சேலம் தனியார் மருத்துவமனை மீது போக்சோ வழக்கு!

மாதி்ரி படம்

மாதி்ரி படம்

Salem News : சேலம் வாழப்பாடி அருகே 17 வயது சிறுமி பிரசவத்தின்போது உயிரிழந்தது தொடர்பாக தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி திருமணம் ஆகாமலேயே கர்ப்பம் தரித்தார். இதை அறிந்த பெற்றோர் 7 மாத கர்ப்பிணியாக இருந்த அவரை, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், கடந்த 7ம் தேதி அவருக்கு மேற்கொண்ட அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு சிறுமியின் உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே, பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கூறினர். ஆனால் காவல்துறையினர் நேரில் சென்று பார்த்தபோது குழந்தைக்கு அசைவுகள் இருந்தன. இதையடுத்து அந்த குழந்தையை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, சிறுமிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் செல்வம்பாள் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையும் படிங்க : ஜூமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்கள் அரசே நடத்த வேண்டும்: சீமான் கோரிக்கை

ஆனால், தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி செல்வம்பாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, சிகிச்சைக்குப் பின்னர் அவர் கைது செய்யப்படுவார் என்று வாழப்பாடி டிஎஸ்பி ஹரி சங்கரி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குறை பிரசவத்தில் பிறந்து, மீட்கப்பட்ட குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவ துறையினர் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Crime News, Local News, Salem