முகப்பு /செய்தி /ராணிப்பேட்டை / பூட்டி இருக்கும் வீடுதான் டார்க்கெட்.. ஸ்கெட்ச் போட்டு திருடும் தம்பதி - அரக்கோணத்தில் அதிர்ச்சி

பூட்டி இருக்கும் வீடுதான் டார்க்கெட்.. ஸ்கெட்ச் போட்டு திருடும் தம்பதி - அரக்கோணத்தில் அதிர்ச்சி

வீடு புகுந்து திருடிய கணவன் மனைவி கைது

வீடு புகுந்து திருடிய கணவன் மனைவி கைது

Ranipettai | வீடு புகுந்து ஏடிஎம் கார்டு மற்றும் நகை திருடிய கணவன், மனைவியை அரக்கோணம் தாலுகா போலீசார் கைது செய்தனர்.

  • Last Updated :
  • Ranipettai (Ranipet), India

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மின்னல் காலனியை சேர்ந்தவர் மாணிக்கம் . இவரது மனைவி சுசீலா (70).  இவர்கள் வீட்டை பூட்டிக்கொண்டு காட்டுப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர்.  இதனை நோட்டமிட்ட ஒருவர் சுசீலா வீட்டு சாவியை எங்கு வைத்து சென்றார் என்பதை தேடி கண்டுபிடித்து பூட்டை  திறந்து நகை, பணத்தை திருடி சென்றார்.

இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசில் சுசீலா புகார் கொடுத்தார் . இன்ஸ்பெக்டர் பழனிவேல் ,சப் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ,  பாராஞ்சி கிராமம்  அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்த சுகன்( 25),  அவர் மனைவி தமிழ்ச்செல்வி (22 ) ஆகியோர் சுசீலாவின் வீட்டுக் கதவை திறந்து வீட்டில் வைத்திருந்த மூக்குத்தி மற்றும் ஏடிஎம் கார்டை திருடி உள்ளனர்.

அன்றைய தினமே ஏடிஎம் கார்டில் இருந்து இரு தவணைகளாக ரூ. 58,000 பணத்தை எடுத்துள்ளனர்.  பணம் எடுத்தது குறித்து செல்போனுக்கு மெசேஜ் வந்த போது தான் தங்களது ஏடிஎம் கார்டு திருடு போனது தெரிந்தது என சுசீலா கூறியுள்ளார். மேலும் வீட்டுக்குள் திருடர்கள் புகுந்த சம்பவமே ஏடிஎம்மில் இருந்து பணம் திருடும் போது வந்த மெசேஜ் மூலமாக கண்டுபிடித்ததாக தெரிவித்தார்.

இதனையடுத்து போலீசார் கணவன், மனைவியை  கைது செய்து நகை , பணத்தை பறிமுதல் செய்வதற்காக அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சோளிங்கருக்கு சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழ்ச்செல்வி ஏற்கனவே அரக்கோணம்  வெங்கடேசபுரம் பகுதியில் ஸ்கூட்டரை திருடி கைது செய்யப்பட்டவர்.  கணவன் மனைவி இருவரும் வேலைக்கு எதுவும் செல்லாமல் திருட்டையே தொழிலாக கொண்டுள்ளனர் என்பது தெரிய வந்தது.

மேலும் படிக்க...நாளை வலுவடையும் புயல்! தமிழ்நாட்டில் மழை வெளுத்து வாங்குமா?

பகல் நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடுவது இவர்களின் வாடிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் வேறு எங்கேனும் கைவரிசை காட்டியுள்ளார்களா எனவும் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.வீடு புகுந்து ஏடிஎம் கார்டு மற்றும் நகை திருடிய கணவன், மனைவியை அரக்கோணம் போலீசார் கைது செய்தனர்.

top videos

    செய்தியாளர்: சிவ கருணாகரன், அரக்கோணம்

    First published:

    Tags: Crime News, Gold Theft, Husband Wife, Ranipettai