முகப்பு /செய்தி /ராணிப்பேட்டை / ரூ.500 கொடுத்தால் ரூ.2,000 மதிப்புள்ள மளிகை பொருட்கள்... திறந்து பார்த்தால் அதிர்ச்சி... கணவன்-மனைவி கைது..!

ரூ.500 கொடுத்தால் ரூ.2,000 மதிப்புள்ள மளிகை பொருட்கள்... திறந்து பார்த்தால் அதிர்ச்சி... கணவன்-மனைவி கைது..!

கைதான மீரா- கணவர் தயாளன்

கைதான மீரா- கணவர் தயாளன்

ராணிப்பேட்டையில் ஐநூறு ரூபாய் கொடுத்தால் இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் கொடுக்கப்படும் என்று பல லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • Last Updated :
  • Ranipettai (Ranipet), India

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை அடுத்த சீனிவாசன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மீரா. இவர் இந்திய தேசிய கிராம தொழிலாளர்கள் சம்பேளனத்தின் ராணிப்பேட்டை மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.

ராணிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் 500 ரூபாய் செலுத்தினால் 2000 ரூபாய் மதிப்புடைய மளிகை பொருட்கள் வழங்கப்படுவதாக ஆசை வார்த்தை கூறி மீராவும், அவரது கணவர் தயாளனும் பல லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து 500 ரூபாய் கட்டியவர்களுக்கு 2000 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை காலையில் நடத்தப்பட்டது.

மீரா தலைமையில், தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர். 500 ரூபாய் கட்டியவர்களுக்கு வரிசையாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. மளிகை பொருட்களில் என்ன இருக்கிறது என திறந்து பார்த்த பொதுமக்களுக்கு அதிர்ச்சியே ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க : நெட் பேக் காலியானது.. கேம் விளையாட முடியாததால் 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை..!

500 ரூபாய் பெற்றுக்கொண்டு வழங்கப்பட்ட மளிகை பொருட்கள் தொகுப்பு, 200 ரூபாய் அளவிற்கு கூட தகுதியில்லாதது என பொதுமக்கள் குற்ற்ஞ்சாட்டினர். வழங்கப்பட்ட மளிகை தொகுப்பு பொருட்களை கிழித்தெறிந்து அதனை தரையில் வீசி விட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நிகழ்ச்சி நடைபெற்ற இடமே பரபரப்பானது.

ஆசை வார்த்தை கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு, ஏமாற்றியதாக ராணிப்பேட்டை போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி மீரா, அவரது கணவர் தயாளன் ஆகியோரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

இதையும் படிக்க : அப்படி என்ன பாவம் செய்தோம்? - மறைந்த கணவர் சேதுராமன் குறித்து அவரது மனைவி உருக்கம்

தொடர் விசாரணையில் மீராவும், அவரது கணவர் தயாளனும் சேர்ந்து இதேப்போல பல கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி, பண மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. அதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் : க.சிவா (ராணிபேட்டை)

First published:

Tags: Crime News, Grocery, Ranipettai