முகப்பு /செய்தி /ராணிப்பேட்டை / ராணிப்பேட்டையில் ஊறவைத்த அரிசியைச் சாப்பிட்ட 2 ஆம் வகுப்பு சிறுமி பலி..

ராணிப்பேட்டையில் ஊறவைத்த அரிசியைச் சாப்பிட்ட 2 ஆம் வகுப்பு சிறுமி பலி..

மாதிரி படம்

மாதிரி படம்

வீட்டில் ஊறவைத்த அரிசியைச் சாப்பிட்ட 2 ஆம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Ranipettai (Ranipet), India

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பின்னாவரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மாரிசாமி என்பவரின் இரண்டாம் மகள் நிகிதா லட்சுமி. 8 வயது ஆகும் நிகிதா அப்பகுதி அரசுப் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று (25.03.2023) மாலை வீட்டில் சமையலுக்காக ஊறவைத்திருந்த அரிசியைச் சாப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டுக் காய்ச்சல் தொடங்கியுள்ளது. தொடர் வயிற்றுப்போக்கு காரணமாக மேல் சிகிச்சைக்காக அரக்கோணம் மருத்துவமனையில் அழைத்து சென்றதில் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகளின் தந்தை மாரிசாமி (50), ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி பரமேஸ்வரி. திடீரென இவர்களின் இளைய மகள் நிகிதாவிற்கு நேற்று வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் காய்ச்சலும் இருந்துள்ளது.

தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில், சிறுமியின் அம்மா பரமேஸ்வரி அப்பகுதி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குச் சிறுமியை அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சைக்கு போதிய வசதி இல்லை என்று செவிலியர் தெரிவித்த நிலையில், அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு இரவு அழைத்துச் சென்றுள்ளனர்.

Also Read : தாயை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற மகன்- ராணிப்பேட்டையில் கொடூரம்

அரக்கோணம் மருத்துவமனையில் சிறுமியைச் சோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இந்நிலையில், பெரும் மன உளைச்சலுக்கு ஆளான தாய் பரமேஸ்வரி தெரிவிக்கையில், நிகிதா நான்கு, ஐந்து முறை ஊறவைத்த அரிசி சாப்பிட்டதாகவும், அதன் பின்னர் தான் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஒரு நாள் மட்டும் தான் பலத்த காய்ச்சல் இருந்தது என்றும், பிஸ்கட்டுகளை சாப்பிட்டு தண்ணீர் தான் குடித்தார் என்று கூறியுள்ளார். சிறுமிக்கு உடலில் எந்த கோளாறும் இல்லாத நிலையில், எப்படி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இறக்க நேர்ந்தது என்று தெரிவில்லை என்று தாய் பரமேஸ்வரி கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

top videos

    8 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து நெமிலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    First published:

    Tags: Girl dead, Ranipettai