முகப்பு /செய்தி /ராணிப்பேட்டை / சாம்பாரில் விஷம் கலந்த 13வயது சிறுவன்.. பக்கத்து வீட்டு குடும்பத்தையே தீர்த்துக் கட்டத் திட்டம்.. அதிர்ச்சி வாக்குமூலம்!

சாம்பாரில் விஷம் கலந்த 13வயது சிறுவன்.. பக்கத்து வீட்டு குடும்பத்தையே தீர்த்துக் கட்டத் திட்டம்.. அதிர்ச்சி வாக்குமூலம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

வீட்டில் வழக்கம் போல அனைவரும் மதிய உணவருந்த அமர்ந்துள்ளனர். அப்போது சாம்பாரில் கடுமையான துர்நாற்றம் வீசவே சந்தேகம் வந்துள்ளது

  • Last Updated :
  • Ranipettai (Ranipet), India

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முன்விரோதத்தால், 13 வயது சிறுவன் சாம்பாரில் விஷம் கலந்து ஒட்டுமொத்த குடும்பத்தையே தீர்த்துக் கட்ட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் கிளாம்பாடி கிராமம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் 39 வதயான சீனிவாசன்கடந்த 19ம் தேதி இவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் பீரோவில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார். தனது புகாரில் பக்கத்து வீட்டில் வசிக்கும் 13 வயதில் சிறுவன் புதிய செல்போன் வாங்கியிருப்பதால் அவர் மீது சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில் ஆற்காடு தாலுக்கா போலீசார் சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கினர்.

இந்நிலையில் , சீனிவாசனின் வீட்டில் வழக்கம் போல அனைவரும் மதிய உணவருந்த அமர்ந்துள்ளனர். அப்போது சாம்பாரில் கடுமையான துர்நாற்றம் வீசவே சந்தேகம் அடைந்த சீனிவாசன் மற்றும் அவரது மனைவி அதனை வெளியே ஊற்றியுள்ளனர். சற்று நேரத்தில் அந்த சாம்பாரை கொத்தி தின்ற வாத்துகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.

இதையும் படிங்க: பெண் சடலங்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரம்: பாகிஸ்தானில் கல்லறையில் பூட்டுப் போட்டு பாதுகாக்கும் அவலம்!

அதிர்ச்சியடைந்த சீனிவாசன் மீண்டும் காவல் நிலையம் சென்று இது குறித்து புகார் அளித்துள்ளார். போலீசார் உடனடியாக 13 வயது சிறுவனை சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுவனின் வாக்குமூலத்தை கேட்ட போலீசார் அதிர்ந்து போயினர் சிறுவனின் அண்ணனான ராஜி என்பவரை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கோவில் உண்டியலில் திருடியதாகக் கூறி சீனிவாசன் தாக்கியுள்ளார்.

இதனால் இந்த இரு குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதற்குப் பழி தீர்க்கவே உணவில் அணிலுக்கு வைக்கும் விஷத்தை கலந்ததாக சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார். சீனிவாசனின் வீட்டில் 15,000 ரூபாய் திருடி புதிய செல்போன் வாங்கியதாகவும் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விமானத்தில் வந்த 23 விஷப்பாம்புகள்... அதிர்ந்துபோன சுங்கத்துறை அதிகாரிகள்..! - பகீர் வீடியோ

top videos

    இதையடுத்து சிறுவன் மீது திட்டமிட்டு பணத்தை திருடுதல், உணவில் நஞ்சு கலந்து கொலை செய்ய முயற்சித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். சிறுவனை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூரில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். முன்விரோதத்தால் சீனிவாசனின் ஒட்டுமொத்த குடும்பத்தையே தீர்த்துக்கட்ட முடிவு செய்து சிறுவன் சாம்பாரில் விஷம் கலந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: Crime News, Ranipettai