முகப்பு /ராமநாதபுரம் /

பரமக்குடியில் பிரமாண்ட யோகா போட்டி.. வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி.!

பரமக்குடியில் பிரமாண்ட யோகா போட்டி.. வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி.!

X
யோகா

யோகா செய்து அசத்திய மாணவர்கள்

Paramakudi Yoga Competition | பரமக்குடியில் நடைபெற்ற மண்டல அளவிலான யோகாசனம் சாம்பியன்ஷிப் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டு யோகாசனம் செய்து அசத்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram | Paramakudi

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற மண்டல அளவிலான யோகாசனம் சாம்பியன்ஷிப் போட்டி, ஏராளமானோர் கலந்து கொண்டு யோகாசனம் செய்து அசத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ் வழங்கப்பட்டன.

பரமக்குடிஆர்னவ் யோகா நிலையம் மற்றும் ஸ்ரீ ராமலிங்க விலாஸ் தொடக்கப்பள்ளியின் சார்பில் 25-ம் ஆண்டு மண்டல அளவிலான யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியானது நடைபெற்றது. இப்போட்டியை பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேதுகருணாநிதி தொடங்கி வைத்தார். இப்போட்டியில், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்து சுமார் 850-மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.

5 வயது, 10 வயது, 15 வயது என 7 பிரிவுகளின் கீழ் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சங்கராபரணம், நடராஜனம், என்கோணசாசனம், யோக நித்திரை, சிராசாசனம் என பல்வேறு பிரிவுகளில் சிறியவர்கள் முதல் பெரியவர் வரை யோகாசனங்கள் செய்து அசத்தினர்.

இதில், வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்த மண்டல அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தமிழ்நாடு அரசு நடத்தும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Paramakudi Constituency, Ramanathapuram, Yoga