ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் எமனேஸ்வரம் மயானத்தில் இளையான்குடியைச் சேர்ந்த இளைஞரின் உடல் ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் மீட்க்கப்பட்டது. இது கொலையா, விபத்தா என காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரம் மயானத்தில் தலையில் இரத்த காயங்களுடன் இளைஞரின் உடல் கிடப்பதாக அப்பகுதியினர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் எமனேஸ்வரம் காவல்துறையினர், பரமக்குடி டிஎஸ்பி காந்தி ஆகியோர் விசாரணை செய்தனர்.
இந்த விசாரணையில் இறந்த கிடந்த நபர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கல்லணி கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் கண்ணன்(வயது 35) என்று விசாரணையில் தெரிய வந்தது. இளையான்குடியில் இருந்து பரமக்குடிக்கு எதற்காக வந்தார். தலையில் ரத்த காயங்கள் இருப்பதால் கொலை செய்யப்பட்டாரா அல்லது விபத்தா என விசாரணை மேற்கொண்டனர். மேலும், உடலின் அருகே இருந்த இருசக்கர வாகனம் குறித்தும் எமனேஸ்வரம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையடுத்து, மோப்பநாய் பிரிவு காவல்துறையினர் மற்றும் தடயவியல் காவல்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். தலையில் ரத்த காயங்களுடன் இளைஞர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்: மனோஜ் குமார், ராமநாதபுரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram