ஹோம் /ராமநாதபுரம் /

டி.என்.பி.எஸ்.சி, காவலர் இலவச மாதிரி தேர்வு.. ராமநாதபுரம் இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாதீங்க!

டி.என்.பி.எஸ்.சி, காவலர் இலவச மாதிரி தேர்வு.. ராமநாதபுரம் இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாதீங்க!

டி.என்.பி.எஸ்.சி, காவலர் இலவச மாதிரி தேர்வு

டி.என்.பி.எஸ்.சி, காவலர் இலவச மாதிரி தேர்வு

Ramanathapuram News | ராமநாதபுரத்தை சேர்ந்த இளைஞர்கள் 2ம் நிலை காவலர்கள், டிஎன்பிஎஸ்சி குரூப் -1  தேர்வுக்காக இலவசமாக 3 முழு மாதிரி தேர்வுகளை எழுத விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரத்தை சேர்ந்த இளைஞர்கள், 2ம் நிலை காவலர்கள், டிஎன்பிஎஸ்சி குரூப் -1 தேர்வுக்காக இலவசமாக 3 முழு மாதிரி தேர்வுகளை எழுத விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி-1 2022 காலிப்பணியிடங்களுக்குரிய முதல்நிலை தேர்வு 19.11.2022 அன்றும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர் தேர்வு 27.11.2022 அன்றும் தேர்வு நடத்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக இந்த தேர்வுக்காக இலவச 3 முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது.

இதையும் படிங்க : “கடலில் மூழ்கி செத்தாலும் பரவாயில்லனு தமிழகத்துக்கு கிளம்புனோம்” - தனுஷ்கோடிக்கு வந்த இலங்கை அகதிகள் குமுறல்!

டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 1 மாதிரி தேர்வு 9.11.2022 (புதன்கிழமை), 15.11.2022 (செவ்வாய்கிழமை), 17.11.2022 (வியாழக்கிழமை) ஆகிய நாட்களிலும் தமிழ்நாடு 2-ம் நிலை காவலர் பணியிடத்திற்கான மாதிரி தேர்வு 18.11.2022 (வெள்ளிக்கிழமை), 23.11.2022 (புதன் கிழமை), 24.11.2022 (வியாழக்கிழமை) ஆகிய நாட்களிலும் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த மாதிரி தேர்வுகளில் கலந்துகொள்ள விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் 04567-230160 மற்றும் 9487375737 (காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை) ஆகிய எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மாதிரி தேர்வை எழுத வரும்போது தேர்வுக்கு விண்ணப்பித்த விவரம், நுழைவுச் சீட்டு நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை தவறாது கொண்டு வர வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram