Home /ramanathapuram /

பாம்பன் மீனவர்களை அழகில் சொக்க வைக்கும் மஞ்சள் கிளி மீன்கள்.. இதன் ஸ்பெஷல் தெரியுமா?

பாம்பன் மீனவர்களை அழகில் சொக்க வைக்கும் மஞ்சள் கிளி மீன்கள்.. இதன் ஸ்பெஷல் தெரியுமா?

ராமநாதபுரம்

ராமநாதபுரம் - மஞ்சள் கிளி மீன்கள்..

Manjal Kili Fish : மன்னார் வளைகுடா பகுதியில் வசிக்கும் பல்வேறு சிறப்புடைய கிளிஞ்சான் மீன் வகையைச் சார்ந்த மஞ்சள் கிளி மீன்கள் இதன் அழகை ரசிக்க கண்ணாடி குவளையில் வைத்து வளர்க்கின்றனர் மீனவர்கள் மேலும், சில  சிறப்புகளை காண்போம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram
மன்னார் வளைகுடா பகுதியில் வசிக்கும் பல்வேறு சிறப்புகளை உடையவை கிளிஞ்சான் மீன் வகையைச் சார்ந்த மஞ்சள் கிளி மீன்கள். இதன் அழகை ரசிக்க கண்ணாடி குவளையில் வைத்து வளர்க்கின்றனர் மீனவர்கள் மேலும் சில சிறப்புகளை காண்போம்.

பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வலையில் 20 கிலோ வரையிலும் மஞ்சள் கிளி மீன்கள்  சிக்கியுள்ளன.  இந்த மஞ்சள் கிளி மீனானது கிளிஞ்சான் மீன் வகையைச் சார்ந்த ஒரு மீன் ரகமாகும்.  இவை பார்பதற்கு அழகாக இருப்பதால் பிடிக்கும் போது உயிருடன் இருக்கும் மீன்களைப் வீட்டிற்கு எடுத்துச் சென்று வளர்ப்பதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

மஞ்சள் கிளி மீன்கள்


இது உணவிற்கும் பயன்படுவதால் இங்கிருந்து தூத்துக்குடி, கேரளா போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது, அங்கிருந்து கணவாய் மீன்கள் போலவே வெளிநாடுகளுக்கும் பதப்படுத்தப்பட்டு அனுப்பப்படுகிறது.

மஞ்சள் கிளி மீன்கள்


இவை 20 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை.ஆங்கிலத்தில் இதனை ராசஸ் என்று அழைக்கின்றனர். மன்னார் வளைகுடா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், மற்றும் லட்சத்தீவுகளில் அதிகளவில் வாழ்கின்றன.

மஞ்சள் கிளி மீன்கள்


மஞ்சள் கிளி மீன்கள் அதிகபட்சமாக 20 செ.மீ நீளம் முதல் 8 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது, உலகத்தில் உள்ள ஏழு பெருங்கடலில் 600 வகை கிளிஞ்சான் மீன்கள் இருப்பதாக கூறுகின்றனர், அதில் இந்தியாவில் மட்டும் 12 வகை கண்டறியப்பட்டுள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இவை, இறால்கள், சிறுமீன்கள், சிப்பிகள், பல்சுனைப்புழுக்கள், நத்தைகள், மட்டிகள், மீன் முட்டைகள், மீன் குஞ்சுகளை   உணவாய் உட்கொண்டு வாழ்கின்றன. பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இதன் விலை கிலோவுக்கு 80 முதல் 100 ரூபாய் வரையிலும் வாங்கப்படுகின்றன.
Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram, Rameshwaram

அடுத்த செய்தி