ஹோம் /ராமநாதபுரம் /

அசுத்தமான நிலையில் சேது மாதவ தீர்த்தம்.. சுத்தம் செய்ய களத்தில் இறங்கிய யாத்திரை பணியாளர் சங்கத்தினர்.. 

அசுத்தமான நிலையில் சேது மாதவ தீர்த்தம்.. சுத்தம் செய்ய களத்தில் இறங்கிய யாத்திரை பணியாளர் சங்கத்தினர்.. 

சேது மாதவ தீர்த்தம்

சேது மாதவ தீர்த்தம்

Sethu Mathava Theertham | ராமநாதசுவாமி திருக்கோவிலுக்குள் உள்ள தீர்த்தங்களில் சேது மாதவ தீர்த்தம் ஒன்றாகும். இந்த தீர்த்தத்தில் நீராடினால் ராமபிரானால் சித்த சக்தியும், சகல லெட்சுமி விலாசமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பராமரிப்பு இன்றி குப்பைகள், அழுகிய செடிகள், பாலிதீன் பைகள் சூழ்ந்து இருந்த சேது மாதவ தீர்த்தத்தை சுத்தம் செய்த உழவாரப்பணி மேற்கொண்ட யாத்திரை பணியாளர் சங்கத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடிவிட்டு பின்பு கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி விட்டு பின்பு சாமி தரிசனம் செய்வது வழக்கமான ஒன்றாகும்.

ராமநாதசுவாமி திருக்கோவிலுக்குள் உள்ள தீர்த்தங்களில் சேது மாதவ தீர்த்தம் ஒன்றாகும். ஒவ்வொரு தீர்த்தத்திற்கும் ஒவ்வொரு வரலாறு உண்டு. அதில், இந்த தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடினால் ராமபிரானால் சித்த சக்தியும், சகல லெட்சுமி விலாசமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மேலும் படிக்க:  வலசைக்காக தனுஷ்கோடியில் குவியும் வண்ணத்துபூச்சிகள்.. வாகனங்களில் அடிபட்டு  இறக்கும் அவலம்..

இந்நிலையில், இந்த தீர்த்தத்தில் தாமரை செடிகள் அதிகம் வளர்ந்துள்ளதால் தாமரை குளம் என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் இங்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. தீர்த்தம் மட்டும் இரைத்து ஊற்றப்படும்.

இங்கு பக்தர்கள் மீன்களுக்கு இரை போடும் போதும், இதன் அருகே அமர்ந்திருக்கும் போதும் பாலிதீன் கவர்கள், வாட்டர் கேன்கள், குப்பைகளை போட்டு செல்கின்றனர். இதனுடன் சேர்ந்து அழுகிய தாமரை இலைகள் குளம் முழுக்க பரவி இருந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் இருந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதையடுத்து திருக்கோவிலில் உள்ள யாத்திரை பணியாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து சேது மாதவ தீர்த்தம் என்ற தாமரைக் குளத்தில் கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து உழவாரப்பணி ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக திருக்கோவில் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளை சுத்தம் செய்து உழவாரப்பணி மேற்கொண்டு வருகின்றனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram, Rameshwaram