முகப்பு /ராமநாதபுரம் /

உலக தண்ணீர் தினம் குறித்த விழிப்புணர்வு.. ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி.. 

உலக தண்ணீர் தினம் குறித்த விழிப்புணர்வு.. ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி.. 

X
ராமேஸ்வரத்தில்

ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி

World Water Day Celebration in Rameshwaram | உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு தண்ணீர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளுக்கு இடையேயான ஓவியப்போட்டி பேய்கரும்பு பகுதியில் உள்ள அமிர்த வித்யாலயம் பள்ளியில் நடைபெற்றது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Ramanathapuram, India

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அமிர்த வித்யாலயம் பள்ளியில், ராமேஸ்வரம் தீவு அளவிலான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட ஓவியப்போட்டியானது நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேய்கரும்பு பகுதியில் அமைந்துள்ளது அமிர்த வித்யாலயம் பள்ளி. இங்கே, உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு தண்ணீர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளுக்கு இடையேயான ஓவியப்போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியை, தங்கச்சிமடம் சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி

இந்த ஓவியப்போட்டியானது 3 பிரிவுகளில் நடைபெற்றது. 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை தண்ணீரை சேமிப்போம் என்ற தலைப்பிலும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை குடிநீரை சுத்திகரிப்போம் என்ற தலைப்பிலும், 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு உலகத்தில் மாற்றம் ஏற்பட மாற்றம் முதலில் நம்மிடமிருந்து தொடங்கப்பட வேண்டும் என்ற தலைப்பிலும் போட்டியானது நடத்தப்பட்டது.

இதையும் படிங்க : ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு!

இதில் 7 பள்ளிகளைச் சேர்ந்த 120 மாணவர்கள் கலந்துகொண்டு தங்களுக்கு அளிக்கப்பட்ட தலைப்பில் ஓவியம் வரைந்து அசத்தினர். சிறந்த ஓவியம் வரைந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டன.

First published:

Tags: Local News, Ramanathapuram