ஹோம் /ராமநாதபுரம் /

கண்களை கட்டி சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த ராமநாதபுரம் மாணவர்கள்

கண்களை கட்டி சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த ராமநாதபுரம் மாணவர்கள்

X
சிலம்பம்

சிலம்பம் சுற்றிய மாணவர்கள்

Ramanathapuram News : குழந்தைகள் கல்வி, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் குழந்தைகள் தற்கொலை தடுப்பு ஆகியவைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்களைக் கட்டி கொண்டு மூன்று மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் மால்காம் கழகம் மற்றும் கலாம் உலக சாதனை புத்தகம் நிறுவனம் இணைந்து ராமநாதபுரம் இன்ஃபன்ட்ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த சிலம்பம் நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர்ச்சியாக 3 மணி நேரம் சிலம்பம் சுற்று நிகழ்ச்சியில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் வகையில் கண்களை கட்டி கொண்டு 3 மணிநேரம் விடாமல் சிலம்பம் சுற்றினர்.

இந்நிகழ்வில் தனித்திறமையாக பிரதிக்ஸா என்ற சிறுமி மரக்காலில் நின்று 2 மணிநேரம் சிலம்பம் சுற்றியும் மற்றும் காயத்ரி என்ற மாணவி கண்களைக்கட்டி கொண்டு இரண்டு மணிநேரம் ஒற்றை வாள் சுற்றியும் உலக சாதனை படைத்தார்.

இதையும் படிங்க : பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த விதவை பெண் இரும்பு ராடால் அடித்துக்கொலை... தங்கையின் கணவர் வெறிச்செயல்!

இதன் தொடர்ச்சியாக, 4 வயது சாய் சஸ்வின் என்ற சிறுவன் மண்பானை மீது ஏறி நின்று ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றினான். மேலும் கனிஷ்கா என்ற மாணவி 8 அடி உயரமுள்ள மல்லர் கம்பத்தில் நமஸ்கார ஆசனம் செய்தபடி 2 மணிநேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிலம்பம் சுற்றி சாதனை படைத்த அனைவருக்கும் கலாம் உலக சாதனை புத்தகம் நிறுவனம் சார்பில் பரிசுகள், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

செய்தியாளர் : மனோஜ்குமார் - ராமநாதபுரம்

First published:

Tags: Local News, Ramanathapuram