ஹோம் /ராமநாதபுரம் /

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு ராமநாதபுரம் கலெக்டர் பாராட்டு

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு ராமநாதபுரம் கலெக்டர் பாராட்டு

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

Ramanathapuram District News : ராமநாதபுரத்தில் இன்று உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து, அரசு மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

மேலும் படிக்கவும் ...
  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து, அரசு மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றும் செவிலியர்களைபாராட்டி பரிசு வழங்கினார்.

டிசம்பர் 1-ம் தேதி உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு எய்ட்ஸ் நோயாளிகளை மற்றவர்களிலிருந்து பிரித்து பேதம் பார்க்க கூடாது என்பதை வலியுறுத்தும் விதத்தில் "சமப்படுத்துதல்" தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், உலக எய்ட்ஸ் தின உறுதி மொழியை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கும் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இதையும் படிங்க : காசி தமிழ் சங்கமம் : ராமேஸ்வரத்தில் எஸ்.எஃப்.ஐ ரயில் மறியல் போராட்ட முயற்சி

இதையடுத்து, ராமநாதபுரம் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கலந்து கொண்டு எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வும், கையெழுத்து இயக்கத்தையும்துவக்கி வைத்தார். பின்னர், எய்ட்ஸ் விழிப்புணர்வு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Ramanathapuram