முகப்பு /ராமநாதபுரம் /

அழிந்து வரும் மரங்களின் விதைகளை நட்டு திருப்புல்லாணியில் மகளிர் தினம் கொண்டாட்டம்..!

அழிந்து வரும் மரங்களின் விதைகளை நட்டு திருப்புல்லாணியில் மகளிர் தினம் கொண்டாட்டம்..!

X
மகளிர்

மகளிர் தினம்

Ramanathapuram District News | அழிந்துவரும் பாரம்பரிய மரங்களின் விதைகளை நட்டு, 25,000 பாரம்பரிய மரங்களை நடவு செய்வோம் என்று ஏராளமான பெண்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் வண்ணாங்குண்டு ஊராட்சியில் மரங்கள் வடிவில் நின்று பெண்கள் தின விழாவை கொண்டாடினர்.

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் வண்ணாங்குண்டு ஊராட்சியில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மகளிர் சுய உதவிக் குழுவினர் ‘மகளிர் தின உற்சவ விழா’ என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொண்டாடினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த மகளிர் தினவிழாவில் அழிந்துவரும் பாரம்பரிய மரங்களின் விதைகளை நட்டு, 25,000 பாரம்பரிய மரங்களை நடவு செய்வோம் என்று ஏராளமான பெண்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டு கேக் வெட்டி மிக சிறப்பாக கொண்டாடினர். இதனை தொடர்ந்து பெண்கள் அனைவரும் மரம் வடிவில் நின்று பெண்கள் தின விழாவை கொண்டாடினர். இந்த விழாவில் பெண்கள் அனைவருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானிடாம் வர்கீஸ் வாழ்த்து தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Ramanathapuram