முகப்பு /ராமநாதபுரம் /

பெண்களின் பெருமையை விளக்கும் பதாகைகளுடன் பரமக்குடியில் பள்ளி மாணவிகள் பேரணி..!

பெண்களின் பெருமையை விளக்கும் பதாகைகளுடன் பரமக்குடியில் பள்ளி மாணவிகள் பேரணி..!

X
மகளிர்

மகளிர் தின பேரணி

Ramanathapuram District | அரசு துறைகளில் பெண்கள் பணிபுரியும் வழக்கறிஞர், காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

பரமக்குடியில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் பெருமை குறித்த பதாகைகளை ஏந்தியபடி 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் நகரின் முக்கிய பகுதிகளில் பேரணியாக சென்றனர்.

ஆண்டு தோறும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் பள்ளியின் சார்பில் பள்ளி மாணவிகள் பெண்களின் பெருமைகள் குறித்த பதாகைகளை ஏந்தியபடி மகளிர் தின பேரணி சென்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அப்போது, பள்ளி மாணவிகள் மருத்துவர், வழக்கறிஞர்கள் போன்ற வேடங்கள் அணிந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டு பரமக்குடி நகரில் முக்கிய பகுதிகளில் வலம் வந்தனர்.  இதனையடுத்து அரசு துறைகளில் பெண்கள் பணிபுரியும் வழக்கறிஞர், காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram