முகப்பு /ராமநாதபுரம் /

கமுதியில் குடிநீர் வசதி வேண்டி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

கமுதியில் குடிநீர் வசதி வேண்டி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

X
கலெக்டர்

கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா

100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது கிராமத்திற்குக் குடிநீர் வசதி கேட்டு ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டனர்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

கமுதி அருகே எம்.புதுக்குளம் ஊராட்சியிக்கு குடிநீர் கேட்டு ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள், ஆட்சியர் அலுவலகத்திற்குள் காவல்துறையினர் அனுமதிக்காததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள எம். புதுக்குளம் ஊராட்சியில் குடிநீர் வசதி இன்றியும், காவேரி கூட்டு குடிநீர் திட்டம் மூலமும் குடிநீர் வசதிகள் இல்லாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், எம். புதுக்குளம் ஊராட்சியைச் சேர்ந்த பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது கிராமத்திற்குக் குடிநீர் வசதி கேட்டு ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட  பெண்கள்

இதையடுத்து, ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் காவல்த்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

First published: