Home /ramanathapuram /

தனுஷ்கோடியில் புயலால் சேதமடைந்த தேவாலயம்.. சீரழிந்து வரும் வரலாற்று சின்னங்கள்..

தனுஷ்கோடியில் புயலால் சேதமடைந்த தேவாலயம்.. சீரழிந்து வரும் வரலாற்று சின்னங்கள்..

தனுஷ்கோடி

தனுஷ்கோடி

Dhanushkodi | ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் முகுந்தராய சத்திரம் அடுத்து அமைந்துள்ளது தனுஷ்கோடி.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India
ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடியில் 1964ல் ஏற்பட்ட புயலில் வரலாற்று சின்னமாக விளங்கக்கூடிய நூற்றாண்டுகள் பழமையான தேவாலயம், ரயில் நிலையம் போன்றவை  சேதமடைந்தும், கருவேல மரங்கள் சூழ்ந்தும் உள்ளது. இவற்றை  தொல்லியல் துறையினரும் மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர் சுற்றுலா பயணிகள்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் முகுந்தராய சத்திரம் அடுத்து அமைந்துள்ளது தனுஷ்கோடி. இங்கு ஆங்கிலேயர்கள் காலத்தில் கடந்த நூற்றாண்டில் கட்டப்பட்ட தேவாலயம் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்டவை புயலில் கடுமையாக சேதமடைந்தன.

ஆங்கிலேயர் ஆட்சியில் தனுஷ்கோடி துறைமுகமானது 01.03.1914-ல் திறக்கப்பட்டு அப்போது பவளப்பாறை, சுண்ணாம்பு கற்கள் கொண்டு கட்டப்பட்டது. இந்நிலையில், 22.12.1964-ல் ஏற்பட்ட புயலால் துறைமுக கட்டிடம், ரயில் நிலையம், சுங்க நிலைய கட்டிடங்கள் சூறைக்காற்றில் இடிந்து தரைமட்டமாக்கின.

இதில் ரயில் நிலையம் மற்றும் தேவாலயம் சிறிய இடிபாடுகளுடன் தப்பியது. நூற்றாண்டுகள் கடந்த சிறப்பு மிக்க இந்த தேவாலயத்தை காண்பதற்கு ராமேஸ்வரத்திற்கு வருகை தரும் பக்தர்கள்,  தரிசனம் செய்து விட்டு பின்பு சுற்றி பார்க்க தனுஷ்கோடி செல்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தனுஷ்கோடியில் 1964 புயலின் எச்சமாய் காட்சியளித்து கொண்டிருந்த சேதமடைந்த தேவாலயத்தின் இடது பக்க சுவர் இடிந்து விழுந்தது. சிறிது சிறிதாக இடிந்து விழுந்து வருகிறது.

வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வரலாற்று சின்னமாக விளங்கும் இந்த கட்டிடங்களில் உள்ள கற்களை வீட்டிற்கு எடுத்து செல்கின்றனர். சிலர் இந்த கற்கள் மிதக்கும் தன்மை உடையதாக கூறி சட்ட விரோதமாக விற்பனையும் செய்கின்றனர்.

இந்நிலையில் இந்த தேவாலயம் மற்றும் ரயில்வே நிலைய மிச்சங்களை தொல்லியல் துறையினரால் பழமை மாறாமல் பாதுகாக்க பராமரித்து பாதுகாத்திடும் வகையில், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் நிர்வாகம் சார்பில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் திட்ட வரைவு மட்டுமே மேற்கொள்ளப்பட்டது, ஆனால் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதை தொடர்ந்து, பருவக்காலங்களில் சூறைக்காற்று மற்றும் மழையால் தேவாலயத்தின் சுவர்கள் இடிந்து விழுகின்றன, ரயில் நிலையத்தில் கருவேலம் மரங்கள் சூழ்ந்தும் உள்ளது.

மிஞ்சிய கட்டிடங்களும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் மிச்சமுள்ள கட்டிடத்தையாவது தொல்லியல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் பராமரித்து பாதுகாக்க வேண்டும் என்று தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி