முகப்பு /செய்தி /ராமநாதபுரம் / 5,000 பேருடன் சென்று அண்ணாமலையை சந்திப்பேன்... நீக்கப்பட்ட பாஜக மாவட்டத் தலைவர் பேட்டி..!

5,000 பேருடன் சென்று அண்ணாமலையை சந்திப்பேன்... நீக்கப்பட்ட பாஜக மாவட்டத் தலைவர் பேட்டி..!

நீக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கதிரவன்

நீக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கதிரவன்

கட்சியின் வளர்ச்சிக்காக 24 மணி நேரமும் பாடுபட்டதாகவும், 4 கோடி ரூபாய் செலவு செய்து பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்ட பாஜக கலைக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், 5000 பேரை திரட்டி கமலாலயம் செல்லவுள்ளதாக, மாவட்ட தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கதிரவன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சி நிர்வாக சீரமைப்பு மேற்கொள்ளப்பட இருப்பதால், அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட பாஜகவின் புதிய தலைவராக தரணி முருகேசன் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், நியூஸ் 18-க்கு பேட்டியளித்த மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் கதிரவன், கட்சியின் வளர்ச்சிக்காக 24 மணி நேரமும் பாடுபட்டதாகவும், 4 கோடி ரூபாய் செலவு செய்து பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளதாகவும் கூறினார். எந்த விளக்கமும் கேட்காமல் தன்னை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக கூறிய கதிரவன், மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து இந்த பிரச்னைக்கு தீர்வு காண்போம் என தெரிவித்தார்.

செய்தியாளர் : பொ. வீரக்குமரன் (ராமநாதபுரம்)

First published:

Tags: Annamalai, BJP, Ramanathapuram