ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் தேர்த்தங்கல் சரணாலயத்திற்கு பறவைகள் வரத்து குறைய இதுதான் காரணமா?

ராமநாதபுரம் தேர்த்தங்கல் சரணாலயத்திற்கு பறவைகள் வரத்து குறைய இதுதான் காரணமா?

தேர்த்தங்கல் சரணாலயம்

தேர்த்தங்கல் சரணாலயம்

Ramanathapuram District News : ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பறவைகள் சாரணாலயத்தில், பறவைகள் வரத்து குறைந்து காணப்படுகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் இது தான் காரணமாக இருக்கிறது. 

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரத்தில் இருந்து நயினார்கோவில் செல்லும் சாலையில் தேர்த்தங்கல் கிராமத்தில் பறவைகள் சரணாலயம் அமைந்திருக்கிறது. இந்த சரணாலயம் சுமார் 29.30 பரப்பளவில் அமைந்துள்ளது. இது நீர் நிலை பறவைகள் சரணாலயமாக கடந்த 2010ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

இந்த பறவைகள் சாரணாலயத்துக்கு, ஆண்டுதோறும், நவம்பர், டிசம்பர் மாதங்களில் நத்தை கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், கருப்பு அரிவாள் மூக்கன், மஞ்சள் மூக்கு நாரை, கூலைக்கடா உள்ளிட்ட ஏராளமான பறவைகள் வந்து செல்கின்றன.

இந்த மாதங்களில் வரும் பறவைகள் மரக்கிளைகளில் கூடுகட்டி முட்டையிட்டு, குஞ்சு பொரித்து மீண்டும் ஏப்ரல் அல்லது மே மாதம் திரும்பி செல்லும்.

இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்வில்லை என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க : 2588 கிமீ தூரம்.. ராமநாதபுரம் டூ லடாக்.. அரசின் இலவச சைக்கிளில் ட்ரிப் சென்ற இளைஞர்!

போதிய அளவு நீர் இல்லாததால், பறவைகள் சரணாலயத்திற்கு பறவைகள் வருகை குறைவாக இருக்கிறது. பருவ மழைக்கு முன் பெய்த மலையின் போது, ஏராளமான நாரைகள் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் குவிந்திருந்தன.

தற்போதைய சமயம் மழை போதிய அளவு இல்லாததால், நீர் நிலைகள் இல்லாமல், பறவைகள் வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால் சரணாலயத்தில் உள்ள மரக்கிளைகளில் பறவைகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.

கடந்தாண்டு ஆயிரக்கணக்கில் இந்த தேர்த்தங்களால் பறவைகள் சரணாலயத்தில் குவிந்திருந்தன. தற்போது, குறைந்த அளவே காணப்படுகிறது என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Ramnad