ஹோம் /ராமநாதபுரம் /

தீபாவளியன்று கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் - ராமநாதபுரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

தீபாவளியன்று கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் - ராமநாதபுரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

தீபாவளி

தீபாவளி

Ramanathapuram District | தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரம் மற்றம் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

தீபாவளி பண்டிகை வரும் 24ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடுகளை பொதுக்கள் ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். அதன்படி பட்டாசு வாங்குதல், புதுத்துணிகளை எடுத்தல், இனிப்பு வகைகளை ஆர்டர் செய்தல் என மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தீபாவளியன்று கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கூறுகையில், “உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.

குறைந்த ஒலியுடன், குறைந்த காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை வெடிக்கலாம். திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிக்க நலச்சங்கங்கள் முயற்சிக்க வேண்டும்.

இதையும் படிங்க : என்னை வாழ வைக்கிறேன் என்றார்... அவரை நம்பினேன், ஆனால் - மாஜி அமைச்சர் வீட்டின் நடிகை சாந்தினி பரபரப்பு புகார்

அதிக ஒலி எழுப்பும் வெடி, சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்கள், குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிக்க கூடாது. மாசற்ற தீபாவளியை கொண்டாடுவோம்” என்று கூறியுள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Ramanathapuram